Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

போடா போடியில் சர்வதேச பாடகியான சகீரா: சிம்பு

போடா போடி திரைப்படத்திற்கு இசையால் உயிர் கொடுக்க சர்வதேச பாடகியான ஷகீராவை பாட அழைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒஸ்தி படத்தினை தொடர்ந்து போடா போடி,வேட்டை மன்னன், வட சென்னை என பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.

 உலக மக்கள் அனைவருமே பரஸ்பரம் அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறார். இப்பாடலை சிம்பு எழுதி இசையமைத்து வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள எலன் மொரிசனுடன் இணைந்து இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

தற்போது நடைபெறும் ஆல்பம் பணிகளின் தொடர்புகளால் பல்வேறு வெளிநாட்டு இசை கலைஞர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார் சிம்பு.

இதனையடுத்து போடா போடி திரைப்படத்திற்கு பாடுவதற்காக சர்வதேச பாடகியான ஷகீராவை அழைத்து வர சிம்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Post a Comment

1 Comments

  1. போடா போடி திரைப்படத்திற்கு இசையால் உயிர் கொடுக்க சர்வதேச பாடகியான ஷகீராவை பாட அழைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement