Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

யார் இந்த செந்தமிழன் சீமான்.?

 சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராகவும், நடிகராகவும் மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர், தமிழர்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது கொண்ட அன்பினாலும், தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி', ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார்.

‘காவிரிநீர் பிரச்சனை’ ‘பாலாறுபிரச்சனை” என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி, திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர் குரலாகத்தான் இருக்கும், இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்தபோது தம் உயிரைப் பற்றி எண்ணாமல், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்து விட்டு வந்தார். இலங்கையில் (ஈழத்தில்) தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மேடை மேடையாய் சென்று முழங்கினார். விளைவு.? பல முறை வெளியில் வரமுடியாத சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
கனடாவில் சென்று முழங்கிய போது அந்நாட்டு அரசால் ‘விசா’ ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இவர், தனது தொழிலான திரைப்படத்துறையை விட்டுவிட்டு, தமிழர்கள் படும் இனல்களை ஊர் ஊராய் சென்று முழங்கினார். தந்தை பெரியாரின் வழியில், சாதி, மதங்களை கடந்த இவர், “தமிழினத் துரோகிகளை” வெளிச்சம் போட்டு காட்டினார். தன இனம் ‘நாதியற்று போய்விடக்கூடாது’ என எண்ணி தொடர்ந்து குரல் கொடுத்தார்."இலங்கையில் தமிழினப்படுகொலையை தடுக்க, தன் இனத்திற்கென ஒரு கட்சி இருந்திருந்தால், தமிழினப்படுகொலையையும்,தடுத்திருக்கலாம்! தமிழீழமும் மலர்ந்திருக்கும்! என்றெண்ணி, தன் ‘அண்ணன்’ பிரபாகரன் வழியில், புலிக்கொடியேந்தி, “நாம் தமிழர்” கட்சியை துவங்கினார்.
“இருப்பாய் தமிழா! நெருப்பாய்!!” என தமிழர்களை தட்டி எழுப்பினார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை நிர்வாணப்படுத்தி, உடைமைகளை சேதப்படுத்தி, அடித்து உதைத்து, நாளும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களன். வேதாரணியத்தில் செல்லப்பன் என்ற மீனவர் இதேபோல படுகொலை செய்யப்பட்டார். “என் சகோதரனை எப்படிடா அடிப்பாய்….? என் தமிழ்ச் சொந்தங்களின் மீது கை வைக்க நீ யாரடா சிங்கள நாயே…? இனிமேல் தமிழர்கள் மேல் கை வைத்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். தமிழன் மேல் அடி விழுந்தால் , சிங்களன் மீதும் அடி விழும்” என தமிழ்ப்புலியாய் சீறினார். விளைவு..? மீண்டும் ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’. 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, பல போராட்டங்களுக்கு பிறகு, நீதிபதிகளாலே 'சீமான் பேசியதில் தவறில்லை' என இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு , வெளியே வந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசு கட்சி நின்ற 63 தொகுதிகளிலும் தம் இனத்தை அழித்த காங்கிரசை எதிர்த்து பரப்புரை செய்தார்.பரப்புரைகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோதும், வட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டும், பரப்புரையின் போதும் உண்டியல் ஏந்தியும் பரப்புரை மேற்கொண்டார்கள், சீமானும், அவரது தம்பிகளும். இறுதியில், தமிழகத்தில் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசு வெற்றி(?) பெற முடிந்தது. காங்கிரசு வெற்றி பெற்ற தொகுதிகள், சீமான் பரப்புரைக்கு போக முடியாத தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரசு தமிழகத்திலே மண்ணை கவ்வியதால், காங்கிரசுக்கு தலைவலியாகவுள்ள சீமானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென, சிலர், காசு கொடுத்து சீமானுக்கு எதிராக பாலியல் புகாரும் அளிக்க செய்தார்கள். 'போர்க்களத்தில் குண்டுகளையும், அரசியல் களத்தில் அவதூறுகளையும் சந்திப்பது இயல்பு' என இவைகளை உதறித்தள்ளினார் .

முல்லைப்பெரியாறு பிரச்னை, 3 தமிழர்களின் உயிர்ப்பிரச்சனை, கூடங்குளம் பிரச்னை என அனைத்து பிரச்சனைகளையும் கையிலெடுத்து இவரும், இவரது தம்பிகளும் களமாடினார்கள். இவர் பேசுகிற கூட்டங்களில், பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடிய போதும், 'இது எனக்கு கூடுகிற கூட்டமல்ல.! என் அண்ணன் பிரபாகரனுக்கு கூடுகிற கூட்டம்' என்று முழங்கினார். பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடினாலும், இவரை ஊடகங்கள், பெரிதாக காண்பிப்பது இல்லை.கட்சியில் பல கட்டுப்பாடுகள் விதித்தார் சீமான் , அந்த கட்டுப்பாடுகள்,'என்னை தலைவன் என அழைக்கக் கூடாது. சீமான் வாழ்க! என முழக்கம் போடக்கூடாது. கட்சியில், எவருக்கும் துண்டு, மாலை போடக்கூடாது. மது,புகையிலை பயன்படுத்தக் கூடாது. பெண்களை மதித்து போற்ற வேண்டும்' என பல நற்கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும், கட்சியில் இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, மருத்துவர் பாசறை,வழக்கறிஞர்கள் பாசறை என புரட்சிகரமாக கட்சி நடத்தினார். 'நான் இந்தியன் அல்ல.! திராவிடன் அல்ல.! தமிழன்.!!' என்று முழங்கியதன் விளைவாக இவருக்கு கிடைத்த பட்டங்கள், 'இனத்துரோகி', தேசத்துரோகி'.
இவர், பணத்தை எதிர்பார்த்திருந்தால் , இவர் திரைத்துறையிலே இருந்து , லட்சம் லட்சமாக சம்பாதித்திருக்க முடியும். இப்படி, வாடகை வீட்டிலே குடியிருக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது. பதவியை எதிர்பார்த்திருந்தால், எந்த
கட்சியிலாவது
கொள்கை பரப்பு செயலாளராக போயிருக்க முடியும். இப்படி சிறை செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்காது. இதனையெல்லாம் எதிர்பாராமல்
இவர் துடிப்பது, தன் இனத்திற்கு என வலிமையான அரசியல் கட்சியை உருவாக்கத் தானே ஒழிய, தான் ஆட்சிக்கட்டிலிலே அமர அல்ல..!! அதனால் தான் , அமெரிக்கா, கனடா, பிரான்சு என நாம் தமிழர் கட்சியை சர்வதேச அளவில் முன்னெடுத்தார். இவர் கட்சியில் விரும்புவது, இனத்திற்கும், கட்சிக்கும் உண்மையாக நிற்கிற தம்பிகளைத்தானே ஒழிய, தனக்கு கொடி பிடிக்கிற தம்பிகளை அல்ல.!
இந்த கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கமும் கூட
, இவரைப்பற்றி உண்மைகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கு தானே ஒழிய, இவரை பற்றி துதி பாடுவதற்கு அல்ல.! ஏனென்றால், தன் தம்பிகளை சீமான் அப்படி வளர்ப்பதில்லை.!!' ஏனென்றால்,
இவர்
தமிழ்த்தேசிய தலைவர் ஏற்றுக்கொண்ட
தம்பி..!!

நன்றி.
Anandh Gudalur


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராகவும், நடிகராகவும் மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர், தமிழர்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது கொண்ட அன்பினாலும், தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி', ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார்.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement