அம்பேத்கார், இமானுவல் சிலைகள் உடைப்பு சாதி மோதலை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது: நாம் தமிழர் கட்சி
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடியில் சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் இமானுவல் சேகரன் ஆகியோரின் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட சிலை உடைப்பு சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக முற்றிலுமாக இல்லாத நிலையில், இப்போது மீண்டும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்திருப்பது தமிழர்களிடையே சாதியின் அடிப்படையில் மோதலை மூட்டிவிடும் திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செயலாகும். இச்சம்பவத்திற்குக் காரணமான, சாதிய வெறியையும், சாதிய அரசியலையும் காப்பாற்றிக்கொள்ளும் சக்திகளை அடையாளம் கண்டு, நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தமிழினம் பல்வேறு வழிகளில் ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கப்பட்டுவரும் அரசியல் சூழலில், ஒரினமாக நின்று பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய தமிழர் சமூகத்தை உள்ளிருந்தே பலவீனப்படுத்தும் நடவடிக்கையே இந்தச் சிலை உடைப்புகளாகும். இதனை தமிழர்கள் சரியாக புரிந்துகொண்டு, இப்படிப்பட்ட சதி செயல்களில் ஈடுபடும் சாதி வெறியர்களை இனம் கண்டு புறந்தள்ள வேண்டும். தமிழினத்தின் விடுதலையை, உரிமைகளை வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தமிழர் எனும் ஏக உணர்வோடு நமது மக்கள் பேரெழுச்சியுடன் ஒன்று திரண்டுவரும் தருணத்தில், அதனை உடைக்க இப்படிப்பட்ட சம்பவங்களை ஏற்படுத்துகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இதனை இன உணர்வோடு தமிழர்கள் ஒன்றுபட்டு வேரறுக்க வேண்டும்.
நாம் மதித்துப் போற்றும் தலைவர்களின் சிலைகளை சமூக விரோத சக்திகள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் சிதைப்பதையும், அதன் மூலம் சமூக அமைதியை கெடுப்பதையும் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு தடுத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
நம்மால் நன்றியுடன் போற்றப்படும் தலைவர்களின் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுடன், தலைவர்களின் சிலைகள் அனைத்தையும், பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காக்களில் நிறுவி, அதன் மூலம் அவைகள் எப்போதும் பொதுமக்களின் பார்வையிலும், காவல் துறையின் பாதுகாப்பிலும் இருக்குமாறு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
சாதிகளை கடந்து தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழ்ச்சமுதாயம் தழைக்கும் பாதையில் பயணிக்க அனைவரையும் இந்நேரத்தில் நாம் தமிழர் கட்சி வேண்டி நிற்கிறது.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.