Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

பகலவனுக்கு பந்திவைக்கும் நாள் இந்நாள்.

 பகலவனுக்கும்
பந்தி வைக்கும்
நாள்.

உலகை உருட்டும்
அவனுக்கு
உலை வைப்பதில்
என்ன தவறு?

செய்நன்றி கொண்டவர்கள்
நாங்கள்.
வயல் பூக்க
வாரிக்கொடுத்தவன்
இந்த
வள்ளல்.
அவனுக்கு
ஒரு பானைப் பொங்கல்..
செய்நன்றி கொண்டவர்கள்
நாங்கள்.

இன்று
புலரும் திங்கள்,
புதுமை செய்யட்டும்.
பொசுங்கிய உடல்களில்,
பிதுங்கிய கண்களில்,
கனத்த கனவுகளில்,
காணாமல் போன சுதந்திரத்தில்,
கண்டித்துப் போன மகிழ்ச்சியில்,
மாரடித்துப்போன சாவுகளில்...
இன்னும்
சவுக்கடி வாங்கும்
தமிழ் மனங்களில்
ஏதாவது
புதுமை செய்யட்டும்..

புதிய திங்கள்
பூவாய்ப் பூக்கட்டும்
தமிழர் மேல்.
பட்ட துன்பங்கள்
பாழாய்ப் போகட்டும்
பாரின் மேல்.

அன்பின் வழிவந்த வலையுலக நெஞ்சங்களே!
         உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளாம்
         நம், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! நன்றி!



Post a Comment

1 Comments

  1. பகலவனுக்கும்
    பந்தி வைக்கும்
    நாள்.

    உலகை உருட்டும்
    அவனுக்கு
    உலை வைப்பதில்
    என்ன தவறு?

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement