Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஆடோசு சாலைக்கு தியாகி முத்துக்குமார் பெயரைச் சூட்ட வலியுறுத்தவும்.

தியாகி முத்துக்குமார் உயிர்நீத்த ஆடோசு சாலைக்கு முத்துக்குமார் பெயரைச் சூட்ட வலியுறுத்தவும். மூன்றாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தவும் அழைக்கிறது!
தமிழர் எழுச்சி இயக்கம்.

நாள்: 29-01-2012, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி
இடம்: முத்துக்குமார் சாலை (ஆடோசு சாலை, சாஸ்திரி பவன் அலுவலகம்)

தமிழன் உயிரை மயிராய் மதித்த தமிழின பகைவர்களை எதிர்த்து தமிழர்கள் நெருப்பாய் எழுந்திட, நெருப்பாய் ஆன வீரத் தமிழ்மகன்
முத்துக்குமாருக்கு... அவர் உயிர்நீத்த சென்னை ஆடோசு சாலையில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலக நுழைவுவாயிலில்
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர் எழுச்சி இயக்கத்தினர் வீரவணக்கம் செலுத்தி
கைதானது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு வீரவணக்கம் செலுத்தும்போது வீரத் தமிழ்மகன் உயிர்நீத்த ஆடோசு சாலைக்கு
முத்துக்குமார் சாலை என்று பெயர் சூட்ட தமிழக அரசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட வகையில் வருகின்ற 29-01-2012 அன்று காலை 10.30 மணி அளவில், முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை) எமது இயக்கம் சார்பில்
வீரத் தமிழ்மகனுக்கு மூன்றாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்த உள்ளோம். இந்த வீரவணக்க நாளில் பங்கேற்க விரும்புவோர்
கீழ்க்கண்ட அலைபேசி அல்லது மின்னஞ்சல் வழி தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ப.வேலுமணி
ஒருங்கிணைப்பாளர் - தமிழர் எழுச்சி இயக்கம்
அலைபேசி: 9710854760
மின்னஞ்சல்: thamizharezhuchi@gmail.com

நண்பர்களே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களின் முகப்புத்தக சுவற்றில்...

கௌரவப்படுத்துங்கள் அந்த வீரத் தமிழ்மகனை (முத்துக்குமார்)


 






Post a Comment

1 Comments

  1. தியாகி முத்துக்குமார் உயிர்நீத்த ஆடோசு சாலைக்கு முத்துக்குமார் பெயரைச் சூட்ட வலியுறுத்தவும். மூன்றாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தவும் அழைக்கிறது!
    தமிழர் எழுச்சி இயக்கம்.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement