இலங்கை வந்துள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை அரசின் மும்மொழி செயற்றிட்டத்தை சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.
இலங்கையில் தமிழ் சிங்கள மொழிகளையும் ஆங்கிலத்தையும் பாடசாலை மட்டத்திலிருந்தே அனைவருக்கும் கற்பிப்பதன் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தமுடியும் என்று அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் அரசு இந்த மொழிக் கொள்கையை ஒரு வழிமுறையாக பயன்படுத்தமுடியும் என்கின்ற போதிலும் அதன்மூலம் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்துவிடமுடியாது என்று தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசியர் எஸ்.தில்லைநாதன் சுட்டிக்காட்டினார்.
1956இல் தனிச் சிங்கள சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, அரசு கல்வித் திட்டங்களில் இருமொழிக் கொள்கை பற்றிய அக்கறை செலுத்தப்பட்ட போதிலும், காலப்போக்கில் அரசியல்வாதிகள் மொழிப்பிரச்சினையை முன்வைத்து அரசியல் நடத்த முன்வந்தமையால் அந்தத் திட்டங்கள் தோல்வியடைந்தன என்றும் தமிழோசையிடம் பேராசியர் தில்லைநாதன் கூறினார்.
எவ்வாறு இருப்பினும் அரசு புதிய மும்மொழி வேலைத்திட்டத்தில் ஆர்வமாக ஈடுபட்டிருக்கும் போக்கு தென்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

1 Comments

ReplyDelete