Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

முல்லை பெரியாறு அணையின் வரலாறு...

( முடிஞ்சா முழுவதும் படிங்க.....அணைக்கு சம்பந்தம் இல்லாத சில விசையங்கள் கூட புரியும்..... மனிதனுக்கு மனிதன் தான் எதிரி )

முல்லை பெரியாறு அணை 1895-ம் ஆண்டு ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜெ.பென்னிகுக் என்பவரால் வடிவமைத்துகட்டப்பட்டது.அணையின் உயரம் 158 அடி.இதில் 155 அடிவரை தண்ணீர் தேக்க முடியும்.ஆனால் அணையின் பாதுகாப்பு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு 152 அடி வரை மட்டும் நீர் தேக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்ட போது தமிழகத்தில் 1810,1827,1877,1878 ஆகிய ஆண்டுகளில் இப்போதைய தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.விவசாயம் முற்றிலும் அழிந்து போனது பட்டினி, காலரா, பெரியஅம்மை போன்றவற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்.விவசாயம் அழிந்து போனதால் பிரிட்டிஷ் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டுமானால் விவசாயம் நடைபெற வேண்டும்.இதை கணக்கில் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அப்போதைய திருவிதாங்கூர் மன்னரிடம் நவம்பர் -22,1886-ம் ஆண்டு 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.அப்போதைய மெட்ராஸ் ராஜதானி கவர்னர் வென்லாக்கும், திருவதாங்கூர் மன்னர் சார்பில் வெங்கம் ராமய்யங்காரும் கையொழுத்திட்டுள்ளனர்.1887 –ல் தொடங்கிய பணி 1895-ம் ஆண்டு நிறையுற்று அணை திறக்கப்பட்டது.இதன் படி 118 மைல் கேரளத்தின் அடர்ந்த காடுகள் வழியே ஓடி வீணாக அரபிக்கடலில் கலக்கும் பெரியாறின் நீரை அணை கட்டி தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு திருப்பும் ஒப்பந்தம்தான் அது.

இந்த ஒப்பந்தத்தின் படி பெரியாறு கரையின் இருபுறமும் உள்ள 8ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏக்கர் ரூபார் 5 விலையில் திருவிதாங்கூர் மன்னரிடம் இருந்து விலைக்கு வாங்கிகொண்டது பிரிட்டீஷ் அரசு. இந்த 8 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு மரம் வெட்டுதல்,மீன் பிடித்தல், வாகனங்கள் சென்று வருவதற்குமான உரிமையும், அந்நிலங்களில் உள்ள கனிமங்கள், விலை மதிப்பற்ற கற்களை பாதுகாக்க திருவிதாங்கூர் சம்ஸ்தானத்துக்கு உரிமையும் ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளாது.

999 ஆண்டுகளுக்கு அதாவது கிபி- 2885 வரை போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் திருவிதாங்கூர் மன்னருக்கு ஆண்டுத் தீர்வையாக, ஒரு ஆண்டுக்கு 42,963ரூபாய்,13 அனா,6 பைசா பிரிட்டீஷ் அரசு செலுத்தியது.இன்றளவும் கேரள அரசுக்கு தமிழக அரசு இந்தத் தீர்வையை செலுத்தி வருகிறது.

இந்த ஒப்பந்த்தின் படி பெரியாறு அணையும், அதன் நீரைத் தேக்கும் அளவுமுறையும் தமிழகத்திற்கான உரிமையாகும்.

ஆனால் கேரள அரசோ தமிழகத்தின் இந்த உரிமையை ஏற்க மறுத்துவருகிறது.பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் செல்லாது என அடாவடித்தனம் செய்கிறது.

வெள்ளையர் ஆட்சிகாலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்றால்…..

* வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற கட்டமைப்பை ஏற்க முடியாது என்று கேரளம் கூறுமா?
*வெள்ளையர்களின் இருநூறு ஆண்டுகால ஆட்சியில் போடப்பட்ட சட்டங்களின் தொகுப்பான இந்திய அரசியல் சட்டத்தை கேரளம் ஏற்க முடியாது என்று கூறுமா?
*வெள்ளையர்களால் கட்டப்பட்ட இந்திய பாராளுமன்ற கட்டிடத்தையும்,கேரளத்தில் உள்ள பிரிட்டிஷ்கால கட்டிடங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று கூறுமா?

அணையின் பாதுகாப்பை முதன்மைப் படுத்தி பிரச்சாரம் செய்யும் கேரள அரசின் செயல் அப்பட்டமான மோசடியாகும்.அதன் நோக்கம் அணையின் பாதுகாப்பல்ல. தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற மலையாள இனவெறிதான் காரணமாகும்.இனி அவற்றை பார்ப்போம்.

1963-ம் ஆண்டு முல்லை பெரியாறு அணையில் சிறிது நீர் கசிவு ஏற்பட்டது.இது மிகவும் சாதாரண விடயமாகும்.ஆனால் மலையாள பத்திரிக்கையான மலையாள மனோரமா இந்த நீர்க் கசிவை காட்டி,அணை பலவீனம் அடைந்துவிட்டதாக எழுதி கேரளமக்களிடம் பீதியை கிளப்பியது.

இப்பத்திரிக்கையின் செய்தியை அடிப்படையாக வைத்துக்கொண்டு, கேரள அரசு அணை பலவீனம் அடைந்து விட்டதாக மத்திய அரசிடம் புகார் தெரிவித்தது.கேரள அரசின் புகாரை அடுத்து மத்திய அரசு அப்போதைய மத்திய நீர்வள இயக்குனர் தலைமையில் முல்லைபெரியாறு அணையை ஆய்வு செய்ய குழு அமைத்தது.அந்தக் குழு அணையை ஆய்வு செய்து அணை மிகவும் பலமாக இருப்பதாக மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது.

1970-ல் மீண்டும் அணை பலவீனம் அடைந்துவிட்டதாக கேரள அரசு பிரச்சனை எழுப்பியது.மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடி தந்து அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகவும்,மீண்டும் 1979 –ல் பிரச்சனை எழுப்பி அணையின் நீர் மட்டத்தை 136 அடியாகவும் குறைத்துவிட்டது.கேரள அரசு அடாவடித்தனம் செய்கிறது என தெரிந்தும் மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து முறையில் பிரச்சனையை கையாண்டு, அணையின் நீர்மட்டத்தை குறைப்பதற்கு கேரள அரசுக்கு துணை நின்றது.

இப்படி நீர் மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டதால் தமிழகத்தில் தேனி,மதுரை,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களும் விவசாயத்திற்கு நீரின்றி 1878-ம் ஆண்டு நிலைமைக்கே பின்னோக்கி தள்ளப்பட்டு வறண்டு கிடக்கிறது

கேரள அரசின் தொடர் நிர்பந்தம் காரணமாக மத்திய நீர் வள ஆணையம்,அணையை தொழிட்நுட்ப ரீதியாக பலப்படுத்தும் மூன்று கட்ட திட்டத்தை தமிழகத்துக்கு வரையறுத்து கொடுத்தது.

1.அணையின் மேல் பாகத்தை 12 அடியில் இருந்து 21 அடியாக அகலப்படுத்துவது.
2.பழைய அணையில், மேலிருந்து அடித்தளம் வரையிலும்,நீள வாக்கிலும் துளையிட்டு 7 மில்லிமீட்டர் இரும்புக் கம்பி செருகுவது.
3.அணையின் அடிமட்டத்தில் இருந்து 145 அடி உயரம் வரை 34 அடி அகலத்திற்கு முட்சுவர் கட்டுவது.
4.சிற்றணையின் மண் அணையை 240 அடி நீளம் பலப்படுத்துவது.
5.வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வரும் கூடுதல் நீரை
வெளியேற்ற மூன்று பெரிய நீர் போக்கி குழாய்கள் அமைப்பது.

மத்திய நீர்வள ஆணையம் வகுத்துத்தந்த மேற்கண்ட பணிகளை 17 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு நிறைவேற்றியது.

இதன் பின் அணையை பார்வையிட்ட மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் தலைமையிலான குழுவினர் அணையை பலப்படுத்தும் பணி திருப்திகரமாக உள்ளதாக,மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

அணையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது, கேரள வனப்பகுதியில் வாகனம் ஓட்டியதாக பொய் வழக்கு போட்டு பிடித்து சென்றது.அணையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளையும் அடித்து நொறுக்கியது.ரூபாய் 4 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை முடக்கி வைத்தது.தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரை கேரளத்தில் இருந்து வெளியேற்றியது.அணையை பாதுகாப்பதற்கு இருந்த தமிழக போலீசாரை வெளியேற்றி விட்டு, கேரள போலிசை அணையை பாதுகாப்பதற்கு கேரள அரசு நியமித்தது.இந்த கேரள போலிசாருக்கு தமிழக அரசுதான் இன்றுவரை சம்பளம் தந்துவருகிறது.

அணையின் பாதுகாப்பிற்காகத்தான், தான் போராடுவதாக கேரள அரசு பிரச்சாரம் செய்தாலும்,மேற்கண்ட அடாவடி செயல்கள் மூலம் அது உண்மையில்லை என்பதை உலகிற்கு கேரள தெளிவு படுத்திவிட்டது.மொத்தத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதே கேரள அரசின் நோக்கம் ஆகும்.

அணையின் பாதுகாப்பை முன்நிறுத்தி கூப்பாடு போட்டுக்கொண்டே, தமிழகத்திற்கு முல்லைபெரியாறு அணையின் மூலம் தண்ணீர் தருவதால் கேரளத்திற்கு இழப்பு ஏற்படுவதாகவும்,இனி இதைதான் முக்கியமானதாக பார்க்க போவதாகவும் கேரள அரசு கூறிவருகிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய நிலைமையில் இருந்து ஒப்பந்தம் போடப்பட்டது.ஆனால் இப்போது கேரளத்தின் தண்ணீர் தேவை அதிகரித்துவிட்டது. ஆகவே நூறு ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட ஒப்பந்தத்தை தூக்கிபோட்டுவிட்டு, புதிய ஒப்பந்தம் போட்டுக்கொள்ள தமிழக அரசு முன் வர வேண்டும் என்று கேரள அரசு, தமிழக அரசை நிர்பந்தித்து வருகிறது.

கேரளத்தின் நீர்த்தேவை அதிகரித்துவிட்டது என்று கேரள அரசு இரண்டு அம்சங்களை முன்வைக்கிறது.
1.விவசாயத்திற்கான கேரளத்தின் நீர்தேவை அதிகரித்துவிட்டது.
2.650 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இடுக்கி அணைக்கு போதுமான நீர்கிடைக்கவில்லை என்பதுதான் கேரள அரசு கூறும் இழப்பு பட்டியலாகும்.
ஆனால்,கேரள அரசு கூறும் மேற்கண்ட இரண்டு அம்சங்களுமே உண்மைக்கு புறம்பானவை. ஏனேன்றால் பெரியாறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து அது முடிகின்ற அரபி கடல்வரை, அடர்ந்த காடுகளும் மற்றும் ஏலம்,காபி தோட்டங்கள் மட்டுமே உள்ளன.விளைநிலங்கள் சிறிதுமில்லை.எனவே கேரளத்தின் பாசனத்தேவை அதிகரித்துவிட்டது என்ற கேரள அரசின் கூற்று அப்பட்டமான பொய்யாகும்.

இரண்டாவது முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீரை தேக்கினால் இடுக்கி அணைக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் நீர்மின் திட்டம் பாதிக்கப்படுகிறது என்கிறது கேரள அரசு.
இடுக்கி அணைக்கான நீர், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் மூன்று சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.இம்மூன்று சிற்றாறுகள் மூலம் இடுக்கி அணைக்கு தேவைக்கும் அதிகமாகவே தண்ணீர் கிடைக்கிறது.உபரியாக கிடைக்கும் நீர் வீணாக அரபி கடலில்தான் கேரள அரசு திறந்து விடுகிறது.ஆனால் இடுக்கி அணைக்கு போதுமான தண்ணீர் முல்லை பெரியாறு அணையில் இருந்துதான் கொண்டு சொல்லவேண்டும் என்று பித்தலாட்டம் செய்கிறது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்ட 1979-ம் ஆண்டில் இருந்து, இன்று வரை மூன்று முறை மட்டுமே முல்லை பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் வழிந்து சென்றுள்ளது.இப்படி வழிந்து செல்லும் நீரும் இடுக்கி அணையிலிருந்து உபரியாக கடலுக்கு திறந்து விடப்படுகிறது.ஆகவே முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் இருந்தால் இடுக்கி நீர்மின் திட்டம் பாதிக்கப்படுகிறது என்ற கேரள அரசின் வாதம் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும்.
கேரள அரசும்,கேரள ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் முல்லை பெரியாறு பிரச்சனையை இடைவிடாது, ஓயாமல் கிளப்பி கேரள மக்களிடையே இனவெறியை தூண்டி வருகின்றன.தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதில் அனைவரும் ஒன்று பட்டு நிற்கின்றனர்.முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து குமுளி,தேக்கடி ஆகிய பகுதிகள் அழிந்துவிடும் என்று கூறித்தான் அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக குறைத்தது கேரள அரசு.தன்னுடைய இந்த கோரிக்கையில் வெற்றி அடைந்த பின் பழைய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது புதிய ஒப்பந்தம் போட்டு புதிய அணை கட்டவேண்டும் என்கிறது.

ஆனால் தமிழகத்திலோ நிலைமை இதற்கு நேர்மாறாக உள்ளது.கேரள அரசு பிரச்சனையை உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும் போது மட்டுமே, தமிழக அரசும்,தமிழக ஓட்டுக்கட்சிகளும் ஒருசில நாட்களுக்கு கூச்சல் போட்டுவிட்டு ஓய்ந்துவிடுகின்றனர்.தொடர் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடுவதில்லை.இவர்களின் இந்த அலட்சியம்,அக்கறையின்மை ஆகியவைதான் இப்பிரச்சனை இன்றுவரை தீராமல் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் ஓட்டுக் கட்சிகளின் அலட்சியம்,விவசாயம் பற்றிய இவர்களின் கண்ணோட்டத்தில் இருந்துதான் வருகிறது.கேரள அரசு பிரச்சனையை கிளப்பும் போது,தமிழக மக்களின் வாக்குகளை கணக்கில் கொண்டு மட்டுமே அப்போதைக்கு கூப்பாடு போடுகின்றனர்.விவசாயத்தின் தேவை,விவசாயிகளின் நலன் ஆகியவற்றில் இருந்து இவர்கள் இப்பிரச்சனையை அணுகுவதில்லை.
தமிழக அரசிற்கும்,தமிழக ஓட்டுக்கட்சிகளுக்கும் விவசாயத்தின் மீதும்,விவசாயிகளின் நலன் மீதும் அக்கறையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில்தான் கீழ்கண்ட காரணங்கள் அமைந்துள்ளன.

1.தமிழகத்தில் மொத்தமாக 40,319 ஏரிகள் உள்ளன.இவைகளில் ஒன்றிரண்டை தவிர ஏனைய ஏரிகள் அனைத்தும் பராமரிப்பின்றி,கைவிடப்பட்ட நிலையில், தூர்ந்துபோய் கிடக்கின்றன.
2.தமிழகத்தில் உள்ள விளைநிலங்களை ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், விவசாயிகளின் அவல நிலையை பயன்படுத்தி அபகரிப்பதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.ரியல் எஸ்டேட் கொள்ளையர்களை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.தமிழக ஓட்டுக்கட்சி தலைவர்களில் பெரும்பாலோர் ரியல் எஸ்டேட் கொள்ளையர்களாக உள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஆனால் கேரள அரசோ, கேரளத்தின் நீர்ப்பாசன திட்டங்களில் உரிய கவணம் செலுத்துகிறது.
விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை கேரள அரசு, சட்டத்தின் மூலம் தடுத்துள்ளது.

தமிழக அரசு அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள், சினிமா கழிசடைகள் ஆகியோர் தமிழக மக்களை சுரண்டியும்,கொள்ளையிட்டும் சேர்த்துள்ள பணத்தை பாதுகாப்பாக, ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்கின்றனர்.ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை வாங்கி தரிசாக போட்டுவைத்துள்ளனர்.

மேற்கண்ட செயலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, கேரளம்,ஆந்திரம்,கர்நாடகம் மற்றும் வட இந்தியாவில் இருந்தும், இப்படிபட்டவர்கள் தமிழக விவசாயிகளின் அவலத்தை பயன்படுத்திக்கொண்டு லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை வளைத்துப்போட்டு வருகின்றனர்.

இப்படி வளைத்துப் போடும் விளைநிலங்களை காட்டி வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெறுகிறார்கள், இந்திய மற்றும் பன்னாட்டு நிருவனங்களுக்கு விற்கிறார்கள்.அதாவது நாட்டு மக்களையும்,நாட்டையும் காட்டிக்கொடுக்கும்,கூட்டிக் கொடுக்கும் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர்.

இப்படிப் பட்ட மாமாக்களை எதிர்த்துப் போராடி முறியடித்தால்தான் முல்லையில் தமிழகத்தின் உரிமையை மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக விவசாயத்தையும்,மக்களையும்,நாட்டையும் பாதுகாக்க முடியும்.



Post a Comment

2 Comments

  1. MACHI NAMA ALLAROM ONDRU SERVOM
    PERIYAPORATAM SEIVOM......!!!

    ReplyDelete
  2. entha problem ku mudevu kerala va koluthena than
    mudeyum.
    by
    unmiyan " TAMILAN DA"

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement