30 வருட யுத்த காலப் பகுதியில் யாழ் குடாநாட்டில் காணாமற் போனோர் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க மாநிலத்துறை உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலகம் விபரங்களை மாவட்ட செயலகத்தினூடாக திரட்டியுள்ளது.
இவர்கள் இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ளனர்.
இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் அரச அதிபருக்கும் இவர்களுக்குமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது யுத்த காலத்தில் காணாமற் போனோரின் எண்ணிக்கை, தாய் தந்தையை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை, விதவைகள் தொடர்பிலும் அரச அதிபருடன் கலந்துலைரயாடி விபரங்களைத் திரட்டிக்கொண்டனர்.
அத்துடன் வலிகாமம், வடமராட்சிப் பிரிவு மீழ் குடியேற்றம், மிதிவெடி அகற்றல் பற்றியும் கலந்துரையாடினர்.
இச் சந்தர்ப்பத்தில் யாழ் குடாநாட்டு மக்களுக்கு தேவைப்பாடுகள் இன்னும் முழுமையாக பூர்த்தியாக்கப்படவில்லை. பற்றாக் குறைகள் இருப்பதை அரச அதிபர் அவர்களிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் மீள் குடியேற்றத்திற்குரிய வீடுகளுக்கான பற்றாக்குறை, கல்வி, சுகாதாரம், மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தேவையாக உள்ளது. அத்துடன் இளைஞர் யுவதிகளுக்க வேலையில்லாப் பிரச்சினை ஒரு சவாலாகவே உள்ளது. இதனை நீக்குவதற்கு கைத்தொழிற்பேட்டைகள், மற்றும் தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.