Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

சிம்புவின் நல்ல மனசு.

 விமான நிலையத்தில் நடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு உதவி செய்திருக்கிறார் சிம்பு.

படப்பிடிப்புகளில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என திரிபவர் சிம்பு.

மேலும் இயக்குனர்களுடன் கருத்து வேறுபாடு, சக ஊழியர்களிடம் கோபப்படுதல் போன்ற குணமும் சிம்புவுக்கு உண்டு என கோடம்பாக்கம் கூறி வந்துள்ளது.

ஆனால் தற்போது இந்த கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அமைதியான பிள்ளையாக கோடம்பாக்கத்தை வலம் வருகிறாராம் சிம்பு.

தற்போது போடா போடி படவேலைகளுக்காக மும்பைக்கும் சென்னைக்குமாக மாறி மாறி விமானம் ஏறி இறங்குகிறார்.

சமீபத்தில் அவ்வாறு சென்னை வந்த போது 80 வயது முதியவர் ஒருவர் வீல் நாற்காலிக்காக காத்துக்கொண்டிருந்தார்.

அவரை சிம்பு தூக்கிக் கொண்டு போய் விமானம் வரை ஏற்றி விட்டாராம்.

அப்போது அங்கிருந்தவர்கள் சிம்புவின் நல்ல மனதைக் கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டனராம்.

திடீரென இவ்வாறு நல்ல பிள்ளையாக நடப்பதற்கு, சிம்புவுக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணமென கூறுகின்றார்கள்.


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. விமான நிலையத்தில் நடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு உதவி செய்திருக்கிறார் சிம்பு.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement