Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

செந்தமிழன் சீமானின் தமிழ் பேச்சின் சிதறல்கள் படித்ததில் சில பிடித்தவை.

 இவ்வளவு நாளும் தமிழர்களைக் கொன்று குவித்தார்களே... யார் இங்கே அடித்தார்கள் என்று அங்கு கொன்று குவித்தார்கள்? நாங்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் மட்டும் எங்கள் மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்து வாழவைத்து விடுவார்களா என்ன?


எங்கள் இனம் மொத்தமும் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டபோதும்கூட, அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும்கொண்டு வெறிகொண்ட மிருகங்களைப் போல உலவியபோதும்கூட,
ஒரு சிங்களவன் மீதுகூட நகக்கீறலை ஏற்படுத்தாத ஜனநாயகப் பிள்ளைகள் நாங்கள்.

உள்ளுக்குள் எரிந்துகொண்டு இருந்த நெருப்பைக்கூட எங்கள் மீது கொட்டிக்கொண்டு வெந்து செத்தோமே தவிர, ஒரு சிங்களவனையும் தொடவில்லை. ஆனால், எல்லாவற்றுக்குமே ஓர் எல்லை உண்டு. இப்போதும்கூட அடிக்கவில்லை, தாக்கவில்லை. ஆனால், செய்ய முடியும். இனியும் எங்கள் மீனவர்களைத் தொடாதே என்று எச்சரிக்கிறோம்.

12 கோடித் தமிழரில் ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டிவிட்டால்கூட மிகப் பெரிய புரட்சி. அட, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் நாடு அடைந்துவிடுவேன்.

ஒரே கனவு... 12 கோடி மக்கள், இரண்டு பெரும் தாய்நிலங்களைக்கொண்ட ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு நாடு அடைந்து, சுதந்திரமாக வாழ வேண்டும். இலங்கை இரு நாடுகளாக வேண்டும். அதுதான் கனவு.


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. உள்ளுக்குள் எரிந்துகொண்டு இருந்த நெருப்பைக்கூட எங்கள் மீது கொட்டிக்கொண்டு வெந்து செத்தோமே தவிர, ஒரு சிங்களவனையும் தொடவில்லை. ஆனால், எல்லாவற்றுக்குமே ஓர் எல்லை உண்டு. இப்போதும்கூட அடிக்கவில்லை, தாக்கவில்லை. ஆனால், செய்ய முடியும். இனியும் எங்கள் மீனவர்களைத் தொடாதே என்று எச்சரிக்கிறோம்.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement