Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

தொடர்ந்து சேட்டை செய்தால் கேரள மாநிலத்தவர்கள் காய்கறிகளை பார்க்க முடியாது.

நாம் தமிழர் கட்சி சார்பில், எம்.ஜி.ஆர்.  நினைவுதின பொதுக்கூட்டம்   சென்னையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

அவர்,    ‘’எம்.ஜி.ஆரை போல ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால் தமிழனுக்கு தனி தேசம் கிடைத்திருக்கும். அது நடக்காமல் போனது வரலாற்று துயரம்’’என்று பேசினார்.

அவர் மேலும்,  ‘’இன்று தமிழர்கள் கடலுக்கு சென்று நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை. காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையை உடைப்பேன் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேரத்துக்கு ஒன்று பேசுகிறார்கள். முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் இங்கு மலையாளிகள் இருக்க முடியாது. 

தமிழகத்தில் இருந்துதான் கேரளாவுக்கு காய்கறிகள் செல்கிறது. தொடர்ந்து சேட்டை செய்தால் கேரள மாநிலத்தவர்கள் காய்கறிகளை பார்க்க முடியாது. முல்லைப் பெரியாறு விவகாரத்தை அவர்கள் சிக்கலாக்க நினைத்தால் எதிர் விளைவுகள் ஏற்படும்’’ என்று பேசினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement