Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

"ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக லண்டனில் கல்லறை வணக்க நிகழ்வு!

தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு வீரமரணமடைந்த "ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.


"ஈகப்பேரொளி" முருகதாசன் வீரமரணமடைந்த நாளின் மூன்றாம் ஆண்டான எதிர்வரும் 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிமுதல் மதியம் 12:00 மணிவரை இந்த கல்லறை வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.

லண்டன் Hendon Cemetery & Crematorium, London, NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள முருகதாசனின் விதைகுழியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் கறுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளுடன் வந்து கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் கேட்டுக்கொள்கின்றது.

புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தைதழுவிக்கொண்ட  "ஈகப்பேரொளி" முருகதாசன் மற்றும் முதன் முதலாய் ஈழத்தமிழ்ர்களின் விடுதலைக்காக இந்திய அரசிடம் நீதிகேட்டும், இறுகப்பூட்டியிருந்த அவர்களின் மனட்சாட்சிக் கதவுகளை திறக்க வைக்கும் நோக்குடனும் தன்னையே தீக்கு இரையாக்கிய "தியாகச் சுடர்" முத்துக்குமார் உட்பட ஆசிய ஐரோப்பிய நாடுகளில் இதுவரை தம்மை தீயிட்டு தமிழர்களுக்காய் நீதிகேட்ட அனைத்து தியாக உறவுகளையும் நினைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த நிகழ்வில் காலநிலையை பொருட்படுத்தாது கடமையுணர்வோடு அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். 




பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு வீரமரணமடைந்த "ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement