Thursday, February 9, 2012

என் மனைவிகள் கூட என்னை ஓய்வெடுக்கவே சொல்கிறார்கள்

என் மனைவிகள் கூட தீவிர அரசியலிலிருந்து நான் ஓய்வெடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு வெள்ளிக்கிழமை கூடி விவாதித்தது.
அதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை முதல் மாலை வரை அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
சங்கரன் கோவில் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார்?
தேர்தல் ஆணையம் திகதி குறிப்பிட்ட பின்பு அது பற்றி பரிசீலிப்போம்.
தி.மு.க. மத்திய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது பதவி விலகினார்கள்.இப்போது ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அவர் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. கேட்கிறதே?
இந்தக் கேள்வியை தவறான முகவரியில் கேட்கிறீர்கள்.
ஒரு பத்திரிகையில் மு.க.ஸ்டாலின் அடுத்த தி.மு.க. தலைவராக வர வேண்டும் என்று 58 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
என் மகனுக்கு இப்படிப்பட்ட ஒரு பெருமை வந்தால் நான் அதை மறுப்பேனா.
அதே ஆய்வில் குறிப்பிட்ட சதவீதம் பேர் நீங்கள் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே?
அந்த பத்திரிகையில் மட்டுமல்ல என்னுடைய மனைவிகள்  இருவரும் அதைத் தான் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள் என்னால்தான் ஓய்வுபெற முடியவில்லை

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.