இந்திய அணி நிர்ணயித்த 153 என்ற வெற்றி இலக்கை அடைய துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 16.5 ஆவது பந்தில் 122 ஓட்டங்களை பெற்ற போது இந்திய அணியின் அரையிறுதிக்கான வாய்ப்பு தகர்ந்து போனது. மேலும் இப்போட்டியில் இந்திய ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றாலும் கூட ரன் ரேட்டில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை விட முன்னிலையில் இருந்தமையால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
இதனையடுத்து எப் பிரிவில் இடம்பெற்ற அணிகளில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
எனவே நாளை மறுதினம் நான்காம் திகதியன்று அரையிறுதியின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன. மேலும் 5 ஆம் திகதி அவுஸ்திரேலியா அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சிகள் காத்திருந்தன. செவாகுடன் ஆரம்ப வீரராக களமிறங்க கம்பீர் 3.3 ஆவது பந்தி மோர்னி மோர்கலின் பந்து வீச்சில் போல்ட் முறையில் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அடுத்த ஓவர்களில் கோலி மற்றும் செவாக் ஆகியோர் அரங்கு திரும்பினர். கோலி (2), செவாக் (17) ஏமாற்றமளிக்க இந்திய
அணி ஆரம்பமே தடுமாற்றத்துக்குள்ளானது.
இதன்பின்னர் வந்த ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் போன்று கூடிய பந்துகளில் குறைந்த ஓட்டங்களை பெற்றார். ரோகித் சர்மா (25), யுவராஜ் சிங் (21) ஆட்டமிழக்க இறுதிவரை நின்று போராடிய ரெய்னா 45 ஓட்டங்களையும் டோனி ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கை வலுப்படுத்தினர்.
இதனையடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.
தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் பீட்டர்சன் மற்றும் மோர்னி மோர்கல் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 19.5 பந்துகளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களை பெற்று ஒரு ஓட்டத்தால் தோல்வியை தழுவியது.
இதேவேளை தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களுக்குள் இந்திய கட்டுப்படுத்தியிருக்குமாயின் இந்திய அணியிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு கிட்டிருந்துக்கும். ஆனால்
தென்னாபிரிக்க 16.5 பந்தில் 122
ஓட்டங்களை பெற்றதையடுத்து இந்திய அணியின் கனவு தகர்ந்து போனது. போராடிய இந்திய அணிக்கு ஒரு ஓட்டத்தால் வெற்றி மாத்திரமே கிடைத்தது.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் பீலிஸ் அதிகூடுதலாக 65 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் 16க்கும் குறைவான
ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். எவ்வாறு எனினும் தென்னாபிரிக்க அணியின் அரையிறுதி வாய்ப்பு குறைவாகவே
இருந்தது. ஆனால் இந்தியாவுக்கு இருந்த அரையிறுதி வாய்ப்பையும் தகர்த்தி விட்டு தொடரிலிருந்து வெளியேறியது.
இந்திய அணியின் பந்து வீச்சில் சகீர்கான் மற்றும் பாலாஜி தலா 3 விக்கெட்டுகளையும் பாலாஜி இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.