Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

மலேசியா விமானநிலையத்தில் தமிழில் அறிவிப்பு செய்ய ஏற்பாடு: மலேசிய அமைச்சர் தகவல்

மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புக்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார்.


மலேசியாவில் அனைத்து சமூக மக்களும் வசித்து வருவதால் அவர்களின் தரம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழில் அறிவிப்புக்கள் அடுத்த ஆண்டு(2012) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் வசிக்கும் 27 மில்லியன் மக்களில் 8 சதவீதத்தினர் தமிழர்களாக உள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக உள்ளனர். சென்னை உட்பட இந்திய நகரங்களில் இருந்து வருபவர்களுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்திற்காக பொதுமக்களின் கோரிக்கைகளின் பேரில் தமிழில் அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் மலேசியா போக்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார்.


 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement