Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

போடா போடி மற்றும் கெட்டவன் படங்கள் பற்றி நாயகன் சிம்பு.

கொலிவுட்டில் சிம்பு நடிக்கும் போடா போடி திரைப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று சிம்பு கூறியுள்ளார்.

கொலிவுட் நாயகன் விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் திரைப்படத்திற்கு பின்னர் கெட்டவன், போடா போடி மற்றும் வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தான் நடிக்கும் படங்கள் குறித்து சிம்பு கூறியதாவது, கெட்டவன் படத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. சின்ன வயதில் இருந்தே என்னை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

போடா போடி படத்தை தயாரிக்கும் ஜெமினி பிலிம்ஸ் 'நண்பன்' மாதிரி பெரிய படங்களை எடுக்க இறங்கினார்கள். அதுமட்டுமில்லாமல் நிறைய படங்களை வாங்கி வெளியிடவும் செய்கிறார்கள்.

இந்நிலையில் நான் நடிக்கும் போடா போடியும் ஜெமினி பட நிறுவனமே தயாரிக்கிறது. எழுபது சதவீதம் படம் நிறைவடைந்துள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

போடா போடி திரைப்படத்தில் நாயகன் சிம்புவுக்கு ஜோடியாக சரத்குமார் மகள் வரலட்சுமி நடிப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Post a Comment

1 Comments

  1. கொலிவுட்டில் சிம்பு நடிக்கும் போடா போடி திரைப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று சிம்பு கூறியுள்ளார்.
    கொலிவுட் நாயகன் விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் திரைப்படத்திற்கு பின்னர் கெட்டவன், போடா போடி மற்றும் வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement