தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலம் தொட்டு இன்று வரை சேரன் ஒரு குழப்ப வாதியாகவும் தன் அங்கீகாரத்திற்காக எதிரிக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருப்பதை காட்டிக் கொடுப்பவராகவுமே இருந்து வருகின்றார்.
நீண்ட காலமாக விடுதலைப் புலி எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட சேரன் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னர் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக காட்ட முனைந்தார். ஆனால் மீண்டும் அவர் தமிழின எதிர்ப்புக் கூடாரத்தின் செல்லப்பிள்ளையாகி விட்டதை அவரது அண்மைக் கால பேச்சுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
"அறம் சார்ந்து காலசுவடிற்கு எதிரான போராட்டம் செய்தவர்களை எழுபதுகளில் அமிர்த்தலிங்கதிடம் மைக்கை பிடிங்கியவர்களிடம் இருந்த வெறியை கண்டேன். மலையாளிகள் தமிழர்களைத் தாக்கினால் திருப்பி தாக்குவதை தவிர வேறு வழி இல்லை" என்று சீமான் கூறியதை சிங்கள அமைச்சர் பேசுவதைப் போல் இருக்கிறது என்று பாமரன் புத்தக வெளியீட்டு விழாவில் சேரன் பேசியுள்ளார்.
தமிழ்த் தேசியத்தை உளமார நேசிக்கிற ஒவ்வொரு தமிழனுக்கும் சீமானையோ அன்றி மே -17 இயக்கத்தினரையோ விமர்சிக்கும் தகுதியும் உரித்தும் இருக்கிறது. ஆனால் இந்திய உளவு நிறுவனத்துக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்நாட்டுக் கிளையாக இயங்கிக் கொண்டு இருக்கின்ற 'காலச்சுவடு' என்ற மலையாளப் பார்பானியக் கூடாரத்தில் உட்காந்து இருப்பவர்களுக்கு அந்தத் தகதியோ உரிமையோ இல்லை.
கடந்த 15 ஆண்டுகளாக வெளிப்படையாகவும் பின்தளம் சார்ந்தும் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப் படுத்தியும் தமிழீழ விடுலைப் போராட்டத்துக்குத் தனது பேச்சாலும் எழுத்தாலும் மூச்சாலும் வலிமை சேர்த்து வருபவர் செந்தமிழன் சீமான். அவர் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காகப் போராடும் போராளி. பலமுறை சிறை சென்றிருக்கிளார்.மலையாளிகள் தாக்கினால் தற்காப்புக்காக அவர்களை எதிர்த்துத் தாக்குவது இனவாதம் ஆகாது. தமிழர்கள் தாக்காத போதும் தாக்கும் சிங்கள ஆட்சியோடு அதனை ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.
மகாவம்ச மேலாண்மைச் சிந்தனையில் மூழ்கித் தமிழர்களை அடக்கி ஒடுக்கி கொடுங்கோலாட்சி நடத்தும் சிங்கள ஆட்சியாளர்களோடு செந்தமிழன் சீமானை ஒப்பிட்டுப் பேசுவது அறியாமை ஆகும். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு தீவிர இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழர்களது காணிகள் கையகப்படுத்தப்பட்டு அங்கு திட்டமிட்ட முறையில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் பாரிய படைத் தளங்கள், படைக் குடியிருப்புக்கள், படை முகாம்கள், பவுத்த விகாரைகள், புத்தர் சிலைகள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.
தமிழ் நாட்டில் தமிழின எதிர்ப்பு என்பது காலச்சுவடு என்ற பார்ப்பனக் கூட்டத்தின் எழுதாத வேதமாக இருந்து வருகிறது. தமிழீழப் போராட்டம் என்றாலே பயங்கரவாதிகளின் போராட்டம் என்று காலச்சுவடு கொச்சைப்படுத்தி வந்திருக்கிறது. அதில் தமிழ் நாட்டுப் பார்பனீயத்தின் இராசகுரு துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி, இந்து இராம் போன்றவர்கள் வெளிப்படையாகத் தெரிந்த முகங்கள்.சேரன் கடந்த 2001 ஆண்டிலும் இதே காலச்சுவடு கூடாரத்துடன் சேர்ந்து தமிழீழத் தேசியக் கவிஞரான உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களைத் தாக்கியமை இங்கு நினைவு கூரத்தக்கது
சேரன் குறித்து மக்களை விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

-தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்-