Friday, December 23, 2011

ஒட்டுமொத்த தமிழர்கள் எதிர்க்கும் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க ஏ.ஆர்.ரகுமான் விருப்பம்!

டேம் 999 படத்தை கேரளாவை சேர்ந்த இயக்குனர் சோகன் ராய் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்துக்கு ஒசிபச்சன் இசையமைத்து உள்ளார்.

இந்த படத்தின் 3 பாடல்களும் 2011 ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆக்ராவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில் ஆஸ்கர் விருதுக்கான படங்களின் போட்டியில் டேம் 999 திரைப்படமும், அதன் 3 பாடல்களும் சேர்க்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டேம் 999 திரைப்படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் என்றார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளா தமிழக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. தமிழக ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வழியில் தாக்கப்படுகின்றனர். மேலும் கேரளாவில் தங்களை மலையாளிகள் தாக்கியதாக அங்கிருந்து தஞ்சம் தேடி வந்த தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குரல் கொடுத்தனர். தமிழக அரசும் இந்தப் படத்து:ககு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் டேம் 999 திரைப்படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளது, தமிழின உணர்வாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் கேரளாவை பூர்வீகமாக்கொண்டவர் என்பதால், அந்த பாசம் இருக்குமோ என்னவோ.