வருடத்தில் பன்னிரு மாதம் அதில் கார்த்திகை மாதம் என்பது உலகளாவிய ரீதியில் எங்கு தமிழர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் மிகவும் பேரெழுச்சியுடன் தமிழீழ மண்ணில் வித்திட்ட மாவீர செல்வங்களின் புனித சிறப்புமிக்க புண்ணிய மாதமாக கருதப்படுவது அனைத்துலக தமிழ் மக்களும் அறிந்த ஒன்றே.
இக் கார்த்திகை மாதத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள்,கல்யாண சம்பிரதாயங்கள் மற்றும் ஏனைய இதர விழாக்கள் நடத்தப்படுவது முற்றாக தடைசெய்யப்பட்டு தமிழ் மக்களின் கண்ணெதிர் கடவுள்களாக போற்றி வணங்கப்படும் மாவீர செல்வங்களின் நினைவலைகளை மனதில் நிறுத்தி தேசிய நினைவெழுச்சி நாளாக இம்மாதம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கடைப்பிடிப்பிடிப்பது உலகம் முழுவதும் பரந்து வாழும் ஒவ்வொரு தமிழர்களின் இன்றியமையாத வரலாற்றுக் கடமையில் ஒன்றாகும்.
தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் இருந்த காலங்களில் எமது தேசியத் தலைவர் தலைமையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எண்ணிப்பாக்க முடியாத அளவிற்கு மிகவும் பெரிய அளவில் உலகம் வியக்கும் வண்ணம் உணர்ச்சியுடன் தேசியத் நினைவெழுச்சி நாளை தமிழீழ சுற்றுவட்டாரம் எங்கும் செய்து முடிப்பது வழக்கம்.இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தாயகத்தில் அமைதிபெற்று தமிழீழம் முழுவதும் சிங்கள இராணுவத்தின் நீதிக்கு புறம்பான ஆட்சி நடைபெறுவதனால் அங்கு எமது உறவுகள் இப்படியான ஒரு புனிதநாளை எழுச்சியுடன் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்கள்.
இருந்தும் பல இடையூறுகளுக்கு மத்தியிலும் சிங்கள நரிகளின் அடாவடித்தனத்துக்கு இடையிலும் அவர்கள் மனம் தளராது தமது வரலாற்று கடமையை மிகச்சிறிய அளவில் தத் தமது வீட்டிலே உணர்வுடன் செய்து முடிப்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.அன்றைய காலச்சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த வேளைகளில் புலத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக பேரெழுச்சியுடன் தேசிய நினைவெழுச்சி நாளை அனைத்துலக தமிழ் மக்களும் ஒன்றாக ஓரணியில் ஒற்றுமையுடன் செய்து முடிப்பது சிங்கள அரசாங்கத்தையும்,சிங்கள இனவாதிகளையும்,மற்றும் தமிழினத் துரோகிகளையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.அது இப்பொழுதெல்லாம் பெரியளவில் மற்றம் பெற்று புலம்பெயர் தேசத்தில் இத்தகைய ஒரு மாவீர செல்வங்களின் புனிதமிக்க நாளை பிளவுபடுத்தும் முகமாக அதாவது ஊர் இரண்டுபட்டால் கூத்தாட்டிக்கு கொண்டாட்டம் போல் ஸ்ரீலங்கா மஹிந்த அரசாங்கத்தின் பணத்திற்காக விலைபோகும் கைக்கூலிகள் தங்களுடைய சதிமுயர்சியினை மெது மெதுவாக நகர்த்தி பொதுமக்களை குழப்பி இந்த வருட மாவீரர் தினத்தில் சர்ச்சைகளை உண்டுபண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.
சென்ற வருடம் பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர்தின நிகழ்வில் இப்படியான ஒரு சர்ச்சையில் குழப்பமடைந்து மக்கள் அனைவரையும் பிளவுபடுத்தி வெவ்வேறு பகுதிகளில் ஏனோ தானோ என நடைபெற்று அதாவது கோயிலை இடித்துவிட்டு சாமியை தெருவில் விட்டதுபோல் நடந்து முடிந்தது.இந்த வருடம் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வில் ஒழுங்கற்ற நிலைகள் காணப்படுமா?என்ற கேள்வி தமிழ் மக்களாகிய எமது மனதில் எழுகின்றது.
ஒவ்வொரு தமிழீழம் சார்பான நிகழ்வுகளிலும் தமிழ் ஊடகங்கள் தங்களுடைய பங்களிப்பை மிகப்பெரிய அளவில் நிலை நிறுத்துவதென்றால் அதில் எந்தவொரு மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்பதே யதார்த்தம்.ஆனால் இப்பொழுதெல்லாம் ஊடகங்கள் வெவ்வேறு தரவரிசைகளில் வேறுபட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வைத்து மக்களை குழப்பமடைய செய்கின்றனரா?என்ற கேள்வியும் தமிழ் மக்கள் மத்தியில் உலவுகின்றது.தயவு செய்து ஊடகங்களாக இருக்கட்டும் மாவீரர் நிகழ்வினை நடாத்தும் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கட்டும் உங்களுடைய கோபதாபங்கள்,சுயநலவாத தன்மைகள் அனைத்தையும் ஒரு ஓரமாக மூட்டைகட்டி வைத்துவிட்டு எமது மாவீர செல்வங்களையும் தேசியத் தலைவரையும் நினைவில் நிறுத்தி இவ்வருட மாவீரர் தின நிகழ்வினை பேரெழுச்சியுடன் யார் தலைமையில் எங்கு நடத்துவது என்பதனை தீர்க்கமாக முடிவு செய்து எத் தடை வந்தாலும் அத்தனையும் வீரக்கரம் கொண்டுடைத்தெறிந்து தமிழர்களாகிய நாம் இவ்வுலகத்தில் ஒன்றுபட்ட இனம் என்பதனை எதிரியானவனுக்கும்,சர்வதேச நாடுகளுக்கும் அனைவரும் ஒன்றாக இணைந்து ஓர் குடையின்கீழ் அணிதிரண்டு மக்களை குழப்பாமல் ஒருபகுதில் மாபெரும் எழுச்சியுடன் எமக்காக மண்ணில் வீழ்ந்து காற்றோடு தம் உயிரினை கலந்து தமிழீழ மண்ணில் வித்திட்ட மாவீர செல்வங்களின் புனித நாளில் எமது வீரவணக்கத்தை செலுத்து சுதந்திர தமிழீழம் கிடைக்கும் வரை எமது இலட்சிய பயணம் ஓயாது தொடர்வோம் என உறுதிகொள்வோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
www.eelavenkai.blogspot.com