Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

தானே புயல் நிவாரணம் கோரி நாம் தமிழர் கட்சி இரண்டு நாள் நடைப்பயணம்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பேரிடர் பாதித்தப் பகுதியாக அறிவித்து உரிய உதவிகளை வழங்க நடுவண் அரசை வலியுறித்தியும், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்கும் முகமாகவும் நாம் தமிழர் கட்சியினர் செந்தமிழன் சீமான் தலைமையில் புதுவையில் இருந்து கடலூர் வரை இன்றும் நாளையும்(பிப் 9,10) இரண்டு நாள் நடைப்பயணம் மேற்க்கொள்கிறார்கள்..
நடைப்பயணத்தை இயக்குனர் மணிவண்ணன் அவர்களும் புதுவை பெரியார் திராவிட கழக தலைவர் லோகுஅய்யப்பன் அவர்களும் இன்று காலை துவக்கி வைத்தார்கள்.. நாளை மாலை கடலூர் திரிப்பதிரிபுலியூர் தேரடி வீதியில் இதே கோரிக்கைகளை வலியுறித்தி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுகூட்டம் நடைபெறுகிறது..

20-01-2012 அன்று தானே புயலால் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்கு நாம் தமிழர் கட்சி மருத்துவ அணி சார்பாக இலவச மருத்துவ முகாம் நடத்தபடுகிறது.. பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களும் இயக்குனர் மணிவண்ணன் அவர்களும் மருத்துவ முகாமை துவக்கிவைக்கிறார்கள்.. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிமுக உரை நிகழ்த்துகிறார்..

தமிழ்ச்சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது..

தமிழ்ச்சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது..



பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பேரிடர் பாதித்தப் பகுதியாக அறிவித்து உரிய உதவிகளை வழங்க நடுவண் அரசை வலியுறித்தியும், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்கும் முகமாகவும் நாம் தமிழர் கட்சியினர் செந்தமிழன் சீமான் தலைமையில் புதுவையில் இருந்து கடலூர் வரை இன்றும் நாளையும்(பிப் 9,10) இரண்டு நாள் நடைப்பயணம் மேற்க்கொள்கிறார்கள்..

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement