Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

வேட்டை மன்னனில் சிம்பு வில்லனா?புதிய பரபரப்புத் தகவல்!!

 சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தின் கதை வெளியாகியுள்ளது. ஒரு தினப்பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் வேட்டை மன்னன் படத்தின் இயக்குனர் நெல்சன் ” சிம்புவும் நானும் கல்லூரித்தோழர்கள். படிப்பு முடிந்ததும் நான் சின்னத்திரைக்கு சென்றுவிட்டேன்.


ஆறு வருடம் கழித்து என் ஆசையை நிறைவேற்ற நான் எழுதிய கதை சிம்புவிற்கும், தயாரிப்பாளருக்கும் பிடித்துவிட்டது. எனவே இப்போது ஒரு பெரிய பட்ஜெட் படம் பாதி முடிந்த நிலையில் உள்ளது. வேட்டை மன்னன் ஒரு கடத்தல் கும்பலை மையமாகக் கொண்ட கதை.

படத்தில் வில்லனாக வலம் வரும் சிம்பு கடைசியில் தான் ஹீரோவாக மாறுகிறார். கடத்தல் கும்பலில் இருப்பவரர்கள் எதிர்கொள்ளும் படபடபான தருணங்கள் படத்தின் ஹைலைட். சண்டைக் காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க இருக்கிறோம். பிரேசில் நாட்டை தான் தேர்வு செய்துள்ளோம்.

ஹாலிவுட் டெக்னீஷியன்களையும், கருவிகளையும் பயன்படுத்தவிருக்கிறோம். பிரேசில் நாட்டின் தற்காப்புக் கலையான ’கேபோயிரா’ என்ற கலையை படத்தில் உபயோகிக்க யோசித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தின் கதை வெளியாகியுள்ளது. ஒரு தினப்பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் வேட்டை மன்னன் படத்தின் இயக்குனர் நெல்சன் ” சிம்புவும் நானும் கல்லூரித்தோழர்கள். படிப்பு முடிந்ததும் நான் சின்னத்திரைக்கு சென்றுவிட்டேன்.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement