Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

அடுத்த படத்துக்கு தயாராகும் செந்தமிழன் சீமான்!… ஹீரோ விஷாலா கார்த்தியா?


நாம் தமிழர் கட்சிப் பணிகள், அரசியல் பணிகள் என நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தாலும், ஒருஅதிரடியான படம் தர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் சதா ஓடிக் கொண்டே இருக்கிறது சீமானுக்குள்.


விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை அவர் கிட்டத்தட்ட தூக்கி எறிந்துவிட்டார் என்றே தெரிகிறது.

உடனடியாக அவர் வேறு படத்தை இயக்கும் யோசனையில் உள்ளார். இதற்கு ஏற்கெனவே பக்காவாக ஸ்க்ரிப்டெல்லாம் தயார் செய்துவைத்துவிட்டார்.

படத்துக்குப் பெயர் கோபம். தம்பியைப் போல பல மடங்கு வேகமும் அழுத்தமான காட்சிகளும் கொண்ட ஸ்கிரிப்ட் இது. உண்மையில் இந்தப் படத்தைதான் சீமான் இயக்குவதாக இருந்தார். ஆனால் இடையில் விஜய்யின் அழைப்பு வந்ததால், இத்தனை தாமதம்.
இந்தப் படத்தில் நாயகனாக விஷால் அல்லது கார்த்தியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார் சீமான்.

இந்தக் கதை குறித்து முன்பு ஒருமுறை சீமான் கூறுகையில், “இந்தப் படத்தில் பிரச்சினைகளை மட்டும் சொல்லவில்லை. அதற்கு இன்றைய சூழலில் தீர்வு என்ன என்பதையும் சொல்லப் போகிறேன்,” என்று கூறியிருந்தார்.

‘அடடா வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமே…’ என்று விஜய் வருந்துமளவுக்கு படம் சிறப்பாக வரட்டும் செந்தமிழன் சீமான்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement