Tuesday, May 8, 2012

அதிர்வு இணையத்தளத்தின் உளவியல் ஆனந்தபுரத்தில் நடந்தது என்ன உண்மைகள்.

 தமிழர்கள் இனி சிங்களவர்களிடம் போராடி உரிமையை வெல்ல முடியாது என்கிற ரிதியிலனா செய்திகளை அதிர்வு இணையத்தளத்தினர் வெளியிட்டு வருகிறார்கள். தமிழ் மக்கள் மீது ஒரு உளவியல் ரீதியான தாக்குதல்களை சில தமிழ் இணையங்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்
அதில் அதிர்வு இணையமும் ஒன்று தற்பொழுது அதிர்வு இணையத்தில் வெளியாகிருக்கும் செய்தி ஒன்று தமிழர்களை விட சிங்களவர்கள் பலம் பொருந்தியவர்களாகவும் விடுதலை புலிகளை தனித்து சிங்களவர்களே போராடி வென்றதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள்....

உண்மையில் ஆனந்தபுரத்தில் நடந்தது என்ன.

கிளிநொச்சி மாவட்டம் விடுதலைபுலிகளின் இராணுவ. பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான முக்கியம் வாய்ந்த தளம் அந்த தளம் விடுதலை புலிகளிடம் இருந்து போன பின்பு அடுத்த நகர்வு விடுதலை புலிகளின் ஒரு மாபெரும் ஊடறுப்பு சமர் அந்த சமர் விடுதலைபுலிகளிடம் முதல் இருந்த பகுதிகள் எல்லாம் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு தாக்குதல் நடத்த திட்டம் வகுப்பட்டு இருந்தது அந்த தாக்குதல் திட்டம் தான் ஆனந்தபுரத்தில் நின்று தாக்குதல் திட்டம் பற்றி விளங்கபடுத்தி கொண்டிருந்தார்கள்...

இந்த ஊடறுப்பு சமர் தாக்குதலுக்காக கிட்ட தட்ட 1000 போராளிகளுக்கு மேல்   ஆனந்தபுரத்தில் தளபதிகளின் கட்டளைக்காக காத்து கொண்டிருந்தனர்.
அந்த இடத்தில் கூடியிருந்த விடுதலை புலிகளின் தளபதிகள் மற்றும் போராளிகளை சிங்கள இராணுவம் சர்வதேச நாட்டு உதவியுடன் சட்லைட் மூலம் ஒன்று கூடிய தளபதிகள், போராளிகள் என எல்லோரையும் இனம் கண்டு அந்த இடத்தில் இந்திய, சிங்கள என கிட்ட தட்ட 5000 இராணுவத்தால் சுற்றி பெட்டி அடிக்கப்பட்டு அங்கே தாக்குதல் ஆரம்பமானது.

நீண்ட நேரம் தொடர்ந்த தாக்குதலில் அங்கே அதிக அளவு இந்திய இராணுவமே பங்கு பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது மூன்று முறை முன்னேறிய இராணுவத்தை திருப்பி அடித்து விரட்டிய போது 1500 மேற்ப்பட்ட இந்திய,சிங்கள இராணுவ வீரர்கள் கொள்ளபட்டர்கள். இராணுவ தளபாடங்கள் கைப்பற்ற பட்டன.

சண்டை நடந்து கொண்டிருக்கையில் தளபதிகளின் கட்டளைகளுக்கு ஏற்ப போராளிகள் அந்த முற்றுகையை உடைத்து வெளியேறினார்கள் அப்பொழுதே இராணுவம் பின்வாங்கி நச்சு வாயு குண்டுகளை வீசியது அதில் பல முக்கியமான தளபதிகள் போராளிகள் என 320க்கு மேற்பட்டோர் கொள்ளபட்டனர் எங்கள் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

முற்றுகையை உடைத்து வெளியேறிய போராளிகள் முள்ளிவாய்க்கால் வந்து சேர்ந்தார்கள்...
இதுதான் ஆனந்தபுரத்தில் நடந்த சமர்...

பின்குறிப்பு. இதில் இந்திய இராணுவம் மற்றும் உலக நாடுகளிடம் வாங்கிய அதி நவீன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன அன்று நச்சு குண்டு அடிக்கா விடின் வன்னி பெரு நிலப்பரப்பு சுற்றி வளைக்கப்பட்டு பாரிய ஒரு தாக்குதல் நடைபெற்று இருக்கும் பல இராணுவ வீரர்களை கைது செய்திருப்பார்கள்....


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.