தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/06/12
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
17/11/ 2012.
அண்மையில் பிரான்சில் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு எமது அமைப்பைத் தொடர்புபடுத்தி சில விஷமிகளால் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த எவருமே இக்கொலையோடு தொடர்புபடவில்லையென்பதையும் எமது அமைப்பைச் சேர்ந்த எவருமே பிரான்சில் கைது செய்யப்படவில்லையென்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் தெளிவுபடுத்துகின்றோம்.
எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் இப்புனித காலப்பகுதியில் எமது மக்களிடையே குழப்பங்களை உருவாக்கும் நோக்கோடு சிறிலங்கா அரசாங்கத்தாலும் அதன் அடிவருடிகளாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள் குறித்து விழிப்பாக இருக்கும்படி தமிழ்மக்களையும் ஊடகங்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.
Social Plugin