Saturday, December 24, 2011

இனவெறியனின் தமிழக சுற்றுப் பயணத்தினால் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள்!

இந்தியப் பிரதமர் இனவெறியன் மன்மோகனின் இரண்டு நாள் தமிழக சுற்றுப்பயணத்தால் ஈழத்தமிழர்களுடைய முகாம்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதுடன் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ஈழத்தமிழர்கள் வெளியூர் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக
இனவெறியன் மன்மோகன் நாளைய தினம் வருகைதரவுள்ளார். இனவெறியனின் இந்த இரண்டு நாள் சுற்றுப்பயணத்தினால் சென்னை, சிவகங்கை மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் உள்ள 113 இலங்கை அகதிகள் முகாம்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. குறித்த முகாம்களில் யாராவது சந்தேக நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பதைனை கியூ பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், முகாம்களின் தலைவர்களிடமும் முகாம்களில் சந்தேகத்திற்குகிடமானவர்களது நடமாட்டம் இருந்தால் தமக்கு தகவல் கொடுக்கும்படியும் கியூ பிரிவினர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இன்று முதல் வரும் திங்கட்கிழமை வரை முகாம்களில் உள்ள யாரும் வெளியூர்களுக்குச் செல்வதற்கான  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் தொழில் புரிபவர்கள் நேரத்துடன் தத்தமது முகாம்களுக்கு வந்தடைய வேண்டுமென்றும் அங்குள்ள தனிப் பதிவேட்டில் தாங்கள் எங்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம் என்பதையும் குறிப்பிட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படும் பட்சத்தில் முகாம்கள் சோதனைகளுக்குட்படுத்தப்படுமெனவும் சந்தேக நபர்களை யாரையும் தங்கள் வீடுகளில் தங்க வைத்திருக்கக் கூடாது எனவும் கியூ பிரிவு மக்களிடம் கூறியுள்ளது.