Saturday, December 31, 2011

ஈழத் தமிழ் மக்கள் விடியலைக் கண்டு தமிழீழம் மலரட்டும்: வைகோ

மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று அவர் வெளியிட்ட புத்தாண்டுச்  செய்தியில்,

’’கணக்கற்ற சோதனைகள் தமிழகத்தையும் தமிழ்க்குலத்தையும் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் புதிய ஆண்டு மலர்கிறது.


கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழினம், தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு கேடு செய்ய முனையும் கேரளம், சிங்களக் கடற்படையால் நாளும் தாக்கப்படும் தமிழக மீனவர்கள், ஆபத்தை விளைவிக்கும் கூடன்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கத் துடிக்கும் இந்திய அரசு,

தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்துக்கும் துரோகம் செய்யும் மத்திய அரசு எனப் பல்வேறு துன்ப இடர்களைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு உரிமை காக்க ,

கட்சி, சாதி, மத எல்லைகள் கடந்து தமிழகம் கொந்தளித்து எழுந்துள்ள நிலைமை எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை ஊட்டுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகம் போற்றி வந்த அறமும், நெறியும், மனித நேயமும் நமது கருவூலமாகும். ஆனால், அதனை மறந்து பல்வேறு கேடுகள் சமுதாயத்தின் அனைத்துப் பகுதிகளையும் செல்லரிக்கச் செய்வதற்கு ஊழலும் மது அரக்கனும் காரணங்களாகும்.

இத்தீமைகளிலிருந்து தமிழகம் விடுபட்டு உன்னத நிலை பெறவும் துயர இருளில் தவிக்கும் ஈழத் தமிழ் மக்கள் விடியலைக் கண்டு தமிழீழம் மலரவும் ஊழலற்ற அரசியல் தமிழகத்தில் வெற்றி காணவும் 2012-ஆம் ஆண்டு பாதை அமைக்கட்டும்’’ என்று கூறியுள்ளார்.

எம் இனிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு நல்
 வாழ்த்துக்கள்.