Thursday, January 5, 2012

யாழ்.தீவகப்பகுதியில் இருந்து 9 ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்தில் தஞ்சம்புகுந்துள்ளனர்.


இன்று 9 ஈழத்தமிழ் அகதிகள் கடல் வழியாக தமிழகம் மண்டபத்தை வந்தடைந்துள்ளதாக சற்று முன் எமது இணையத்தள  செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் கடல் வழியாக தமிழகத்தை வந்தடைந்துள்ள 9 ஈழத்தமிழ் அகதிகளையும் தமிழக கரையோர காவல் துறையினர் சிறப்பு முகாம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இவர்கள் அங்கு கடும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருவதோடு,இவர்களை தொடர்ந்தும் தனிமையில் ஒரு சிறப்பு முகாம் ஒன்றிலேயே வைக்கவுள்ளதாக உள்ளிருந்து இரகசியமாக கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான செய்தி இன்னும் எந்த ஊடகங்களிலும் வெளிவராததோடு இவர்களை இவ்வாறு சிறப்பு முகாம் ஒன்றில் வைப்பதன் மூலம் இனி வரும் காலங்களில் இவ்வாறு ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களை தடுத்து நிறுத்த முடியும் என்றும் தமிழக கரையோர காவல்படையினர் கருதுவதாகவும் எமக்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

போர் முடிவு பெற்று விட்டதாகவும் இனி இலங்கையில் இருந்து அகதிகள் என்று சொல்லி எவரும் எந்த நாட்டிற்கும் செல்லத்தேயையில்லை என்றும் அவ்வாறு அகதிகள் என்று எவரும் எந்த நாடுகளிலும் தஞ்சம் புகுந்தால் அவர்களுக்கு அங்கு வாழ்வதற்கான அனுமதி வழங்கத்தேவையில்லை என்றும் சிங்கள அரசு அறிவித்திருந்த நிலையில் தொடர்ந்தும் ஈழத்தமிழர்கள் தமது உயிரை பாதுகாக்கும் நோக்குடன் அகதிகளாக அலையும் துரதிஷ்டமான நிலமை தொடர்ந்துகொண்டே செல்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.