Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஊழல் வாதிகளை காங்கிரஸ் ஆதரிக்காது: ராகுல் காந்தி அதிரடி என்ன கொடுமை சரவணா.

இந்தியாவில் ஊழல் செய்பவர்கள் விடயத்தில் காங்கிரஸ் இரக்கம் காட்டாது என்றும் அவர்களை ஆதரிக்காது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் உத்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேற்று(7.1.2012) நடந்த பிரச்சாரத்தில் ராகுல் பேசியதாவது, ஊழல் புகார் தொடர்பாக அமைச்சர் பதவியிலிருந்து குஷ்வாஹாவை மேற்கு வங்க முதல்வர் மாயாவதி நீக்கியுள்ளார். ஆனால் ஊழலுக்கு எதிராகப் பிரசாரம் செய்த பாஜக, குஷ்வாஹாவை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது.

தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் குஷ்வாஹா ஊழல் செய்ததாகக் கூறப்பட்ட புகாரை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது.

குஷ்வாஹா ஊழலை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இளைஞர் காங்கிரஸ் தான் வெளிக்கொண்டு வந்தது என்றும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார். அவரை முதல்வர் மாயாவதி பதவி நீக்கம் செய்த பின், எங்கள் கட்சியில் சேருவதற்கு முயற்சித்தார். மேலும் தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றும் படியும் கேட்டார்.
ஆனால் அவரைக் கட்சியில் சேர்க்க நாங்கள் மறுத்து விட்டோம். மேலும் உங்களைக் காப்பாற்ற மாட்டோம், சிறைக்கு அனுப்புவோம் என எச்சரித்து அனுப்பினோம் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement