வருகிற 26ம் திகதி புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் வீரச்செயல் புரிந்த சிறுவர்-சிறுமிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் (கொலை)விருது வழங்குகிறார்.
விருது பெறும் சிறுவர்-சிறுமிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பரமேஸ்வரன் விருது பெறுகிறான்.
பரமேஸ்வரனின் சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் அரக்கசனஹள்ளி கிராமம். ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 2010ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 18ம் திகதி சிறுவன் பரமேஸ்வரன் தனது கிராமத்தின் அருகே உள்ள நாகாவதி ஆற்று கால்வாயில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த சிறுமிகள் உமா (9), பூஜா (9), சரண்யா (11), ஆர்த்தி (10), புவனேஸ்வரி (9) ஆகிய 5 பேர் கால்வாய் கரையில் நின்று விளையாடிக் கொண்டு இருந்தனர்.
திடீரென்று எதிர்பாராத விதமாக 5 பேரும் தவறி கால்வாயில் விழுந்து தத்தளித்தனர். சிறுமிகள் அலறல் சத்தம் கேட்ட பரமேஸ்வரன் கால்வாயில் குதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேரில் ஆர்த்தி, புவனேஸ்வரி, சரண்யா ஆகிய 3 பேரை காப்பாற்றினான்.
உமா, பூஜா ஆகியோரை காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்கள்.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் பரமேஸ்வரன் தனி ஆளாக நின்று 3 சிறுமிகளை காப்பாற்றி இருக்கிறான்.
இதில் பரமேஸ்வரனுக்கு நீச்சல் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. 5 பேரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் தனக்கு நீச்சல் தெரியாது என்பதையும் மறந்து விட்டு துணிச்சலுடன் கால்வாயில் குதித்து 3 உயிர்களை காப்பாற்றி இருக்கிறான்.
இதுபற்றி அதிகாரிகளுக்கு தெரிய வந்ததும் அவர்கள் சிறுவன் பரமேஸ்வரன் பெயரை வீரச்செயல் விருதுக்கு சிபாரிசு செய்தனர். பரமேஸ்வரனுடன் நாடு முழுவதும் வீரச்செயல் புரிந்த 24 சிறுவர்-சிறுமிகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
குஜராத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி மிட்டல் மகேந்திர பாய் படாடியா கீதா சோப்ரா விருது பெறுகிறார். இவர் ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்களை எதிர்த்து போராடி விரட்டியடித்தவர்.
இதையடுத்து உத்தரகாண்டைச் சேர்ந்த கபில்சிங் நேகி என்ற 15 வயது சிறுவன் கொட்டும் மழையில் வெள்ளத்தைக் கடந்த போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சக மாணவனை போராடி மீட்டான். ஆனால் கபில்சிங் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானான்.
இருப்பினும் அவனது வீரத்தை பாராட்டி மறைவுக்குப் பின் மிக உயரிய பாரத் விருது வழங்கப்படுகிறது.
மேலும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஓம்பிரகாஷ் யாதவ், சஞ்சய் சோப்ரா விருது பெறுகிறான். இவன் தீயில் எரிந்து கொண்டிருந்த பள்ளி வேனில் இருந்து துணிச்சலுடன் செயற்பட்டு சக மாணவர்களை காப்பாற்றினான்.
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஆதித்யா கோபால் என்ற 14 வயது சிறுவன் கால்வாயில் விழுந்த தனது நண்பனை காப்பாற்ற முயன்றபோது உயிர் இழந்தான்.
14 வயது டெல்லி சிறுவன் உமா சங்கர் பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற உதவி செய்து அவர்களது உயிரை காப்பாற்றினான்.
சத்தீஸ்காரைச் சேர்ந்த அஞ்சலி சிங் கவுதம்(15) நக்சலைட்டுகள் தாக்குதலில் இருந்து தனது சகோதரனை காப்பாற்றினான். இவர்களது பெயரும் வீரச்செயல் விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னைதெரசவின் கையால் இந்த விருது கிடைத்து இருந்தால் எல்லா சிறுவர்களும் சந்தோசப்பட்டு இருப்பார்கள் இந்த கொலைகாரன் கையால் கிடைத்த படியால் எல்லா சிறுவர்களும் கொளைகரர்களா மாறுவதற்கு சந்தர்ப்பம் உண்டு....
1 Comments
வருகிற 26ம் திகதி புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் வீரச்செயல் புரிந்த சிறுவர்-சிறுமிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் (கொலை)விருது வழங்குகிறார்.
ReplyDelete