இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பாக மத்திய அரசு தொடர்ச்சியாகக் காட்டிவரும் அசமந்தப் போக்கானது, இந்தியாவின் சமஷ்டி நிர்வாகக் கட்டமைப்பின் மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கச்தீவு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள உறு தியான நிலைப்பாட்டை வரவேற்றுள்ள இந்திய கம் யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.
இந்திய மீனவர்கள் தாக் கப்படும் விடயம் தொடர்பாக அரசியற் கட்சிகள், தமி ழக அரசு மற்றும் அதன் சட்டசபை என்பவற்றால் வெளிப்படுத்தப்படும் கருத்துகளுக்கு வேறுபட்ட நிலைப் பாட்டையே மத்திய அரசு தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது.
நீண்டகால அடிப்படையில், மத்திய அரசின் இவ் விரோதப் போக்கானது இந்தியாவின் சமஸ்டி நிர்வாகம் மீது தீவிர தாக்கத்தை உண்டு பண்ணும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மேற் கொள்ளப்படும் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தமிழக ஆளுநர் கே.ரோசையா சட்டசபையில் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், இது தொடர்பாக இலங்கை அரசுடன் விரைவான, உறுதி யான பேச்சுகளை நடத்துமாறும் இந்திய மத்திய அரசி டம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1974 இல் மேற்கொள் ளப்பட்ட உடன்படிக்கை யின் கீழ் இலங்கைக்கு இந் தியாவால் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட கச்சதீவை மீளவும் உடைமையாக்கிக் கொள்வது தொடர்பில் இந் திய மத்திய அரசு மிகத் தெளி வான தீர்வை எடுக்க வேண்டும் எனவும் ரோசையா மீளவும் வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்திய மீனவர்கள் இழந்த உரிமைகளை மீளவும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கச்சதீவு விவகாரம் தொடர்பில் இலங்கையுடன் இந்திய மத்திய அரசே உடன்படிக்கையை மேற்கொண்டிருந்தது. கச்சதீவு இலங்கையிடம் கையளிக்கப்பட்ட போதிலும், இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் தொடர்ந்தும் பேணப்படும் என 1974 இல் இந்திய மத்திய அரசால் அறிவிக்கப் பட்டிருந்தது என்றும் டி.ராஜா தெரிவித்தார்.
ஆகவே, இந்திய மீனவர்களின் நலன்களைப் பாதுகாப்பது மத்திய அரசின் பிரதான கடப்பாடாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது மீனவர் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடிய போதிலும், தற்போதும் மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான தாக்குதலானது, இந்திய மத்திய அரசு மீனவர் பிரச்சினையின் தீவிரத் தன்மையை புரிந்து கொள்ளவில்லை என்பதையே சுட்டி காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.