சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் சிலர், புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பின்னணி பாடகருமான கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது.
அந்த விழாவில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூன்று பேரும் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளரான கருணா கோஷ்டியினர் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூவரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜீவா தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்.
இதுகுறித்து ஜீவா, அந்த விழா சர்ச்சையாகி இருக்கிறது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் விழாவில், நான் கலந்துகொள்ள மாட்டேன். சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டேன்’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று (26.12.2011) செய்தியாளர்களை சந்தித்த சங்கீதா -கிரிஷ் ஜோடி, யார் என்ன சொன்னாலும் சுவிஸ் போவோம் அடாவடி பேட்டி அளித்தார்கள். கலைஞர்களை கட்டுப்படுத்தாதீர்கள், அரசியலாக்காதீர்கள், மிரட்டாதீர்கள், எனக்கு தைரியம் இருக்கிறது, யார் தடை
போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி என்று திமிர் பேட்டி அளித்தார்கள்.
பிரபல பின்னணிப்பாடகர் மனோ உட்பட ஏராளமான பிரபல கலைஞர்கள், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை செல்வதையோ, ராஜபக்சே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ தவிர்த்திருக்கிறார்கள்.
தமிழர்களிடையே மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சங்கீதா - கிரிஷ் என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.