Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

செந்தமிழன் சீமானால் விலைபோகாத சினிமா!

சமீபத்திய தமிழ் சினிமாவில் பூசை போட்ட நாளில் இருந்தே தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது உலகளாவிய தமிழர்களாலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் "கண்டுபிடி கண்டுபிடி". காரணம், அதில் சீமான் கம்பீரமான காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பதுதான். புகழ் மாறன் என்கிற பாத்திரத்தில் சீமான் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.


கிராமங்களில் நிகழும் சமுக சீர்கேட்டை சாடும் விதமாக படத்தை யதார்த்தமாகவும் மிக நேர்த்தியாகவும் இயக்கி முடித்திருக்கிறார் இயக்குனர் ராமசுப்ரமணியன். படத்தை முடித்த கையோடு பலமுறை பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகிஸ்தர்கள் என சினிமா புள்ளிகள் பலருக்கும் படத்தை போட்டு காட்டி இருக்கிறார். படத்தை பார்த்தவர்கள் சீமானின் நடிப்பையும் படத்தையும் வாயார பாராட்டி இருக்கிறார்கள்.

ஆனாலும் படத்தை ரிலீஸ் செய்வதில் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறது தயாரிப்புத் தரப்பு. ''உங்க படம் நல்ல படம்தான். அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா , படத்துல சீமான் பேசுகிற வசனங்கள் ரொம்ப கூர்மையா இருக்கு. ஆட்சியாளர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இடங்களில் சாடி இருக்கார் சீமான். அதனால சாதாரணமா ஒரு படத்துக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கூட இந்த படத்துக்கு கிடைக்காது. சீமானுக்கு ஆளுங்கட்சி ஆதரவு சில காலம் இருந்தது. ஆனால், இப்போ ஆளுங்கட்சிக்கும் அவருக்கும் சரிவர ஆகலை. அதனால தியேட்டரில் இருந்து ஒவ்வொரு விசயத்திற்கும் போராட வேண்டியிருக்கும் . வினையை நாங்க விலை கொடுத்து வாங்க விரும்பலை" எனச் சொல்லி தயாரிப்பாளர் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்கள் சினிமா புள்ளிகள்.

தற்போது என்ன செய்வது என்றே தெரியாமல் எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் அந்த புது முக இயக்குனரும் தயாரிப்பாளரும். யாராவது ஒரு தைரியமான வெளியிட்டாளர் தன்னுடைய படைப்பை கண்டுபிடித்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு காட்டிவிட மாட்டாரா எனக் காத்திருக்கிறது ஒரு நல்ல தமிழ் படம்.
www.eelavenkai.blogspot.com





Post a Comment

1 Comments

  1. சமீபத்திய தமிழ் சினிமாவில் பூசை போட்ட நாளில் இருந்தே தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது உலகளாவிய தமிழர்களாலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் "கண்டுபிடி கண்டுபிடி". காரணம், அதில் சீமான் கம்பீரமான காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பதுதான். புகழ் மாறன் என்கிற பாத்திரத்தில் சீமான் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement