Wednesday, February 1, 2012

கூடங்குளம் அணு உலையின் செயற்பாடுகளை தொடங்கலாம்: நிபுணர் குழு அறிக்கை.

கூடங்குளம் அணுசக்தி திட்டம் குறித்து ஆராய அரசாங்கம் ஒரு நிபுணர் குழு அமைத்திருந்தது.

அந்த குழு தனது அறிக்கையை இன்று சமர்ப்பித்துள்ளது. அறிக்கையில், அணுசக்தி திட்டம் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின்(AERB) நிபந்தனைகளுடன் முடிவடைந்தது.

தற்போதைய அனைத்து பாதுகாப்பு தேவைகளும் பூர்த்தியாகி உள்ளது மற்றும் ஒப்புதல் செயற்பாடுகளும் பாதுகாப்பானது என்பதால் உற்பத்தியை தொடங்கலாம் என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

மேலும் மக்களின் அச்சங்களை போக்க அனைத்து பாதுகாப்பு பிரச்சினைகளுக்கும் அறிக்கையிடப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை என்பதால் பேச்சுவார்த்தையை தொடர முடியாத நிலையில் உள்ளது.

அணுசக்தி திட்ட உண்மைக்கு எதிராக மக்கள் இயக்கம் தவறான திசையில் திருப்பபட்டிருப்பதை காண முடிகின்றது என்றும் நிபுணர் குழு கூறியுள்ளது.