Saturday, March 10, 2012

நமக்கு வேண்டாம் அணுஉலை ( அணுகுண்டு )

 தென் தமிழகத்தில் அமைந்துள்ள கூடன்குளத்தில் இந்திய, ரஷிய கூட்டு முயற்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட அணுமின் நிலைய கட்டுமானப்பணிகள் ஏறத்தாழ நிறைவுற்று அணுமின் உற்பத்தி தொடங்க தயாரான நிலையில் அப்பகுதியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்தும்,
தங்களை சூழ்ந்துள்ள அபாய நிலை குறித்தும் கேள்வி எழுப்பி அணுமின் நிலைய பணிகளை உடனடியாக நிறுத்தி, உடனடியாக அந்த நிலையத்தை நிரந்தரமாக மூட கோரி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

 இந்த நிலையில் இந்த எதிர்ப்பு குழுவிற்கு எதிராகவும், அணுமின் நிலையத்திற்கு ஆதரவாகவும், அதை உடனடியாக செயல்படுத்தி மின் உற்பத்தியை தொடங்க கோரியும் பல்வேறு அரசியல், சாதீய, மற்றும் பிற அமைப்புகளும் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். அணுமின் நிலைய ஆதரவு குழுவினர் ‘எதிர்ப்பு குழுவினர் மீது அந்நிய சக்திகளின் தூண்டுதலின் பேரில் செயல்படுவதாகவும்’, எதிர்ப்பு குழுவினர் ‘ஆதரவு குழுவினர் மீது ஆட்சி  வர்க்கத்தின் தூண்டுதலின் பேரில் செயல்படுவதாகவும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கின்றனர்.

எதிர்ப்பு போராட்ட குழுவினர் கேட்கும் அறிவியல் பூர்வமான கேள்விகளுக்கு சமூக ரீதியான மின் தேவை காரணங்களை சுட்டிகாட்டியும், சமூக ரீதியான வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியான பாதுகாப்பு அணுகுமுறைகளை அறையும் குறையுமாக விளக்கியும் வரும் அரசின் மூலம் அனுப்பப்பட்ட வல்லுனர்கள் மற்றும் பிரதிநிதிகள் தந்த விளக்கங்களில் திருப்தி அடையாமல் தங்கள் பக்க நியாயங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியும், தமிழகம் முழுவதும் உள்ள பல தரப்பட்ட மக்களிடம் ஆதரவு திரட்டியும் வருகின்றனர் எதிர்ப்பு போராட்ட குழுவினர்.

  இந்த நிலையில் தனது அக்கினிச்சிறகுகளை விரித்து பறந்து வந்து கூடன்குளத்தில் கணிப்பொறியை விட வேகமாக அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பாமர மண்ணின் மைந்தர்களை புறக்கணித்து அரசியல் சூழ்ச்சியாளர்கள் அமைத்த குழுவுடன் உரையாடி திருப்தி அடைந்து அவர்களையும் திருப்தி படுத்தி சென்றுள்ளார் 2020-ல் இந்தியாவை மனித நேயம் அற்ற வல்லரசாக மற்றும் கனவுடன் இந்தியாவின் தலைமை மற்றும் முதல் குடிமகனாக பதவி வகித்த இந்திய அணு விஞ்ஞனி முனைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்.

  அணுச்சமன்பாடான E=MC2  என்ற சமன்பாட்டை உலகிற்கு அறிவித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1945-ல் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது உலகின் மிகப்பெரும் பயங்கரவாத நாடான அமெரிக்காவின் ஏவுதலில் பாய்ந்த லிட்டில்பாய் மற்றும் ஃபேட் மேன் ஆகியோரின் தாக்குதலின் பிரதிபலிப்பை கண்டு கண்ணீர் சிந்தி தனது விளக்க சமன்பாடு தனது வாழ்நாளில் தான் செய்த மாபெரும் தவறு என்பதை எண்ணி வருந்தியதாக வரலாறு தெரிவிக்கிறது. ஆனால் தற்போதைய உலகில் தம்மை ஒரு சிறந்த அணுசக்தி அறிஞர்களாக காட்டி பெருமைபட்டுக் கொள்ளும் ஏ.பி.ஜெ. போன்றவர்கள் தாம் இவ்வுலகின் அமைதியை குலைத்து மனிதகுல அழிவை பெருக்க வந்திருக்கும் சுனாமி, பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு ஒப்பான செயற்கை பேரழிவு உபகரணங்கள் என்பதை மறந்து தம்மை சமூகத்தின் சிறந்த பொறுப்பாளர்களாக காட்டிக் கொண்டு சாத்தானின் உருவங்களாக திரிகின்றனர். ஆக்கபூர்வ செயல்பாடுகளை செய்வது போல நடித்து அழிவிப்பூர்வமான வேலைகளை கையிலெடுத்து, புகழ் தேடிக்கொள்ளும் இது போன்ற அறிவீனர்களை மக்கள் எப்போதும் புறக்கணிப்பதே சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

 மேலும் வாழ்வாதாரதிற்காக போராடும் மக்களை, தமக்கு இறையாண்மயை தர்மமாக இட்டு தம்மை ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்த இத்தேசத்தின் உரிமையாளர்களை புறக்கணித்து, ஏமாற்றி, பயமுறுத்தி ஒடுக்க நினைக்கும் இந்த மன்மோகன்சிங் தலைமையிலான, இந்தியாவின் மிகப்பெரும் பயங்கரவாத இயக்கமான கங்கிரஸின் தலைவர் சோனியாகாந்தி என்ற அயல்நாட்டவரின் கைப்பாவையான இந்திய ஆட்சித்துறை, இந்த கூடன்குளம் பிரச்சினையை நாட்டின் தேவை என்ற அடிப்படையில் விளம்பரப்படுத்தி, தமிழினத்திற்கு கட்டுப்படாத, தமிழினத்தின் மாண்பிற்கு மதிப்பளிக்காத கௌரவ பிரச்சினையாக கருதி ஏனைய நீதி மற்றும் நிர்வாக துறைகளை பயன்படுத்தி ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் இந்த உரிமைப் போராட்டத்திற்கு எதிராக செயல்படுத்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

  பொதுவாக ஏற்கனவே தம் தலைநகரில் ஒரு அணுமின் நிலையத்தை கொண்ட தமிழகத்திற்கு மேலும் ஒர் அணுமின் நிலையம் என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பிற தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பிற மாநிலங்களால் புறக்கணிக்கப்பட்டு கையேந்தும் நிலையில் இருக்கும் தமிழகம் தம்மை அழித்து, தம் பாதுகாப்பையும், வளங்களையும் அழித்து, அடகு வைத்து பிற மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தையும் தமிழ் இனத்தையும் மதிக்காமல், இளிச்சவாயர்களாக மட்டுமே இன்று வரை பயன்படுத்திவரும் ஏகாதிபத்திய இந்திய அரசின் தொடர்ச்சியான சுரண்டல் நடவடிக்கையில் ஒன்றுதான் இந்த கூடன்குளம் அணுமின் நிலையம்.

அணுமின் நிலையத்தை நியாயப்படுத்த நினைக்கும் அரசு தமது மத்திய, மாநில பிரதிநிதிகளாய் இருக்கும் கேடிகளையும், நிர்வாக அதிகாரிகளையும் இது போன்ற அழிவுப்பூர்வமான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், கூடங்களுக்கும் அருகில் குடியிருக்க முன்வருமா என்றால் நிச்சயமாக வராது. மேலும் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பும் அரசின் கைத்தடிகள், அறிவீனர்கள், வருவாய்க்காக தன்மானத்தையும், பாதுகாப்பையும் அடகு வைத்து அரசின் கைக்கூலிகளாய் செயல்படுபவர்கள் இதுபோன்ற அணு உற்பத்தி மையங்களின் அருகில் தம் குடும்பத்தோடு குடிவர சம்மதம் தெரிவிப்பார்களா?

  தமிழனுக்கென்றும், தமிழினத்திற்கென்றும் பாதுகாப்பையும், அங்கீகாரத்தையும் சர்வதேச அளவில் தேடி நிலைநாட்ட நாம் போராடும் இந்த சமயத்தில், தமிழினம் என்ற ஒன்று எதிவரும் காலங்களில் வரலாற்றில் மட்டுமே பேசப்படும் இனமாக மாறி விட கூடாது என்ற அடிப்படையில் நம்மை காத்துக் கொள்ள சர்வதேச அரங்கில் நாம் போராடும் இவ்வேளையில், தமிழனின் தனித்துவத்தையும் உலகில் உள்ள இனங்களிலேயே தமிழினம் தனிப்பெருமை பெற்றது என்பதையும் பறைசாற்ற நாம் போராடும் இந்த காலகட்டத்தில் தமிழினத்தை எளிதாக அழிக்க பயன்படும் இதுபோன்ற அழிவுப்பூர்வமான உற்பத்தி நிலையங்களை தடுக்க தமிழனாகிய நாம் ஒன்றிணைந்து போராட வேண்டியது நம் பொறுப்பான கடமை.

 இலங்கையின் மைந்தர்களாக விளங்கிய தமிழின மக்களை கொன்று குவிக்க ஆயுதங்களை கொடுத்து உதவிய இந்திய அரசு எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழினத்தை அழிக்க இந்த அணுஉலையை அணுகுண்டாக பயன்படுத்தாது என்பதற்கு என்ன உத்திரவாதம். வெளிப்படையாக சொல்லப்போனால் கூடன்குளம் அணுமின் நிலையம் நம் பாதுகாப்பை முழுவதுமாக ஏகாதிபத்திய இந்தியாவிடம் அடகு வைக்கும் ஒரு சதிச்செயலே. எனவே இந்த அணுமின் நிலையத்தை முற்றிலுமாக செயல் இழக்க செய்து முழுவதுமாக மூடுவதுடன் மட்டுமல்லாமல் அந்த இடத்திலிருந்து அனைத்தையும் அப்புறப்படுத்தவும் வேண்டியது அவசியம் அதற்கான ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆதரவையும், குரலையும் நாம் கண்டிப்பாக கொடுக்க முன் வர வேண்டியது அவசியம் என்பதை உலகின் தலைகோடி முதல் கடைகோடி வரை உள்ள ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும்.


உறவுகளே பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். 

நன்றி: மொகமட் கான்