Friday, November 2, 2012

தமிழீழ விடுதலை போராட்டத்தின் துயர நாட்களில் இன்றும் ஒரு நாள் தமிழீழ மாணவன்

தமிழீழ நாட்டில் வழமை போல் களங்களில் போராளிகள் எதிரிகளுடன்  சண்டையிலும் ஈடுபட்டு கொண்டு இருந்தார்கள் மக்களும் தங்கள் வேலைகளில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள் பாடசாலை மாணவர்களும் பாடசாலைகளுக்கு சென்று கொண்டு இருந்தார்கள்.


 அன்றோ தமிழ் மக்களுக்கு ஒரு விடியாத காலை பொழுதாக அமைந்ததை ஒருவரும் அவதானிக்கவில்லை ஆம் அன்று திடிரென பறந்த  சிங்களவனின் கழுகு விமானங்கள்  வன்னி நிலப்பரப்பிற்க்குள் ஊடுருவி பல முறை தாக்குதல்களை வழமை போல் நடத்திவிட்டு சென்றுள்ளார்கள் மக்களும் அதை பெரிதில் எடுத்து கொள்ளவில்லை. ஒரு மணித்தியாலம் கழித்து புலிகளின் குரல் வானொலி ஊடாக வந்த செய்தியோ உலக தமிழ்  மக்கள் எல்லோரையும் கண்ணீருக்குள் இட்டு சென்றுள்ளது.

தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்று தர நாடு நாடாக அலைந்து திரிந்த எங்கள் பாசத்திற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வனின் வீரச்சாவு என்ற செய்தி எல்லோரையும் கண்ணீர் மழைக்குள் தள்ளி விட்டது...

 இள வயதில் தன்னை  தமிழீழ விடுதலை போராட்டத்தில் இணைத்து கொண்ட போது தினேஷ் என்னும் பெயருடன் போராளி ஆனார் தமிழகத்தின் நான்காவது பயிற்சி பாசறையில்  பயிற்சியை முடித்து மருத்துவ போராளியாகி பின்பு தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக கடமையாற்றினார்.

இந்தியா இராணுவம் யாழ் குடா நாடு வந்து தரையிறங்கிய போது குறைந்த அளவு போராளிகளையும் குறைந்த அளவு ஆயுதங்களையும் வைத்து இந்திய படையினரை தாக்குதல் மூலம் திணற வைத்தார்கள்.

உண்மையில் ஒரு சிகரெட்டைப் புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்து விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற இந்திய அரசின் எண்ணத்திற்கு யாழ்ப்பாணத்திற்குள் நின்றபடி இந்தியப் படை வெளியேறும் வரை புலிகள் குறித்த இந்திய அரசின் கணிப்பீடுகளையும் அனுமானங்களையும் பொய்த்துப்போக வைத்த புலிகள் இயக்கத்தின் திறனில் பிரிகேடியரின் பங்கு அளப்பரியது.

தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆற்ற வேண்டிய பல கடமைகள் இருந்தும் எதிரியின் கழுகு எங்கள் அண்ணன் சு.ப தமிழ்செல்வனின் உயிரை குடித்துள்ளது.

தமிழீழ விடுதலை போராட்டத்தில் பல துயர நாட்கள் இருந்தாலும் இந்த நாள் உலக தமிழ் மக்களால் ஒரு மறக்க முடியாத நாளாகவும் களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபட முடியாத நாளாகவும் காணப்படுகின்றது.

எந்த விடுதலைக்காக எதிரியுடன் களமாடி வீராச்சாவடைந்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் காற்றுடன் கலந்தார்களோ அதே விடுதலையை கையில் எடுத்து இன்றைய தமிழ் பிள்ளைகள் ஆகிய நாங்களும் புறப்படுவோம்.


 தமிழனின் எழுச்சி
தமிழனின் ஆட்சி.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.