உலகமெங்கும் இன்று தீபாவளிக் கொண்டாட்டமாக இளைய தளபதியின் நடிப்பில் துப்பாக்கி வெடித்துள்ளது.
தீபாவளிக் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்களுக்கு துப்பாக்கி அதிரடியான இசைக் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பின்னிப் பெடலெடுக்கின்றன. ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த நட்சத்திர ஹீரோவை சரியாக கையாண்டுருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு போன்ற படங்களிலிருந்து துப்பாக்கியை வேறொரு கோணத்தில் பார்க்கலாம்.
விறுவிறுப்பான கதைக்களத்தில் தொடங்கும் துப்பாக்கியின் கதை, ஒரு இராணுவ வீரனின் விறுவிறுப்பான செயல்கள் மூலம் தீவிரவாதிகளை பிடிப்பது.
இராணுவத்தில் இருக்கும் விஜய் மும்பைக்கு விடுமுறையில் வருகிறார். அங்கே பொலிஸில் இருக்கும் சத்தியனுடன் ஊர் சுற்றுவது தான் வேலை.
ஒரு முறை இவர்கள் பயணம் செய்த வண்டியில் ஒரு தீவிரவாதி வேறேங்கோ கொண்டு செல்ல முற்பட்ட குண்டு வெடிக்கிறது.
ஆனால் அத்தீவிரவாதியை பிடித்து பொலிசில் கொடுக்கிறார். அவன் ஒரு பொலிசாராலேயே தப்பிக்க வைக்கப்பட இவரது வேட்டை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் தவறான பொலிசாரைக் கூட தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு இருக்கிறது.
கதையில் பெரியளவு வித்தியாசத்தைக் காணமுடியாவிட்டாலும் விஜயின் வழமையான பாணியில் இருந்து பெரிதும் மாறுபட்டதாகவும் அளவுக்கதிகமான ஹீரோயிசம் இல்லாமலும் கில்லியில் பார்த்த விஜயின் இன்னும் ஒரு புதிய தோற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது.
நடனத்துக்காக தினேசும், சிறீதரும் விஜயை நன்றாகப் புழிந்து விட்டார்கள் என்பது அவரது நடன அசைவுகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.
காஜல் அகர்வால் அழகு விருந்து படைத்தாலும் திரில் நிறைத்த கதைப் பகுதிக்குள் நுழைக்கப்படவே இல்லை என்பதால் ஆரம்பத்தில் மட்டும் ஒரு சில காட்சிகளால் மனதுக்குள் பதிந்ததோடு மறைந்து போய் விடுகிறார்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும் இடத்திலும், தீவிரவாதிகளை அவர்கள் இடத்திலேயே தங்கையை பணயமாக வைத்து அழிக்கும் இடத்திலும் விஜய் ஸ்டைலில் ஒரு கலக்குக் கலக்கி விடுகிறார்.
துப்பாக்கி சுழற்றலக்காகவே அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும்காட்சியும் அதற்காக விஜயின் கெட்டப்பும் ஃபாக்ஸ், ஏ. எக். என் இல் ஒளிபரப்பான பிரபல தொடரான 24 மணிநேரத்தையும் அதில் நடித்த ஜக் பவர் ஐயும் அப்படியே நினைவுபடுத்திச் செல்கிறது.
அதே போல கையில் சிப்ஸ் பதித்துச் செல்லும் இடத்திலும் மிசன் இம்பாஸிபிள் ஐ நினைவூட்டுவது போல உள்ளது.
சந்தோஷ் சிவன் தனது ஒளிப்பதிவை திறம்படச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பஸ் மற்றும் கப்பல் குண்டு வெடித்தால் காட்சிகள் மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் இப்படத்திலும் இரு தங்கைகள் மூலம் தங்கை சென்டிமென்டை கையாண்டிருக்கிறார். அனைவரும் எதிர் பார்த்தது போல படத்தில் அலட்டல் அலப்பாறைகள் நிறைந்த எந்நவொரு பஞ்ச் வசனத்தையும் விஜய் பேசவில்லை.
அதே போல ஹரிசின் இசையும் விஜயின் ஸ்டைலுக்கும் படத்தின் விறுவிறுப்புகம்கும் பெரிதும் ஒத்துப் போவது மிகப் பெரிய பிளசான விடயமாக இருக்கின்றது.
நண்பனுக்கு பின்னர், விஜய்யும் சத்யனும் துப்பாக்கியில் இணைந்து நடித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
காஜல் அகர்வால் முதன் முறையாக விஜய்யுடன் நடித்தாலும் நடிப்பில் கவரச்சியில் வாங்கும் சம்பளத்திற்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார்.
பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

நடிகர்: விஜய்
நடிகை: காஜல் அகர்வால்
இயக்குனர்: ஏ.ஆர்.முருகதாஸ்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு: சந்தோஷ்சிவன்