Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

சிங்களபெண்ணை திருமணம் செய்வதற்காக பதவியை இராஜிநாமா செய்த இந்திய இராணுவ அதிகாரி

 இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்வதற்காக தனது இராணுவ பதவியை இராஜிநாமா செய்ய முற்பட்ட இந்திய இராணுவத்தின் மேஜர் தர அதிகாரி ஒருவரின் இராஜிநாமா கடிதத்தை இராணுவம் ஏற்க மறுத்துள்ளது. இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ் குமார் என்பவரின் இராஜிநாமாக் கடிதத்தை இராணுவம் ஏற்க மறுத்த நிலையில் அவர்   வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.


இராணுவ சமிக்ஞை படைப் பிரிவில் அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாலும் இலங்கைப் பெண்ணுடன் இவருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டியிருப்பதாலுமே அவரது இராஜிநாமாவை ஏற்க முடியாதுள்ளது என இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

இருப்பினும் விகாஸ் குமாரின் இராஜிநாமாவை இராணுவம் மறுக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந் நிலையில் இந்த தீர்ப்பினை எதிர்த்து இந்திய இராணுவம் மேன்முறையீடு செய்துள்ளது.
மேஜர் விகாஸ் குமாரின் காதலியான இலங்கைப் பெண் அனிலா ரணமாலி குணரத்ன, பெங்களூரில் முதுமாணிப் பட்டக் கற்கை நெறியொன்றை மேற்கொண்டு வருகின்றார். இந் நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்யவிருந்தனர்.

இந்திய இராணுவ சட்டப்படி வெளிநாட்டுப் பிரஜையொருவரை இந்திய இராணுவத்தில் உள்ள ஒருவர் திருமணம் செய்ய முடியாது. இதனாலேயே விகாஸ் குமார், தனது பதவியை இராஜிநாமா செய்ய முன்வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Ad Code

Responsive Advertisement