Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

எமக்கு வேண்டும் நியாயமான தீர்வே; அடித்துக் கூறுகிறார் சம்பந்தன்.

தனிநாடு ஒன்றுக்கான அதிகாரங்களையே கூட்டமைப்பு கேட்கிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கூற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முற்றாக நிராகரித்து விட்டது.


"தனிநாட்டுக்கான அடிப்படையைக் கொண்ட எந்த அதிகாரங்களையும் நாம் கேட்கவில்லை. சாதாரண முறையில் நியாயமான அதிகாரப் பகிர்வை உலகின் பல நாடுகள் மேற் கொண்டிருக்கின்றன. அவ்வாறானவற்றைத்தான் நாம் வலியுறுத்துகிறோம்'' என்று "உதயனி'டம் கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

"ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வே எமது தேவை. தீர்வுப் பேச்சுகளில் நாம் எந்த நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை. புதிய விடயங்களையும் புகுத்தவில்லை. தீர்வுப் பேச்சுகளை ஆரோக்கியமான முறையில் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியும், நானும் நடத்திய பேச்சின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டை நடைமுறைப் படுத்துமாறே நாம் இப்போது கூறுகிறோம். இது கூட்டத்தின் குறிப்பில் கூட தெளிவாக உள்ளது. இது புதிய நிபந்தனையாகப் பார்க்கப்படுகின்றமை எம்மையும், அமைதித் தீர்வொன்றை விரும்பும் எமது மக்களையும் கவலையடையச் செய்துள்ளது. எதுவித புதிய நிபந்தனைகளையும் நாம் விதிக்கவில்லை'' என்றார் சம்பந்தன்.

 

Post a Comment

1 Comments

  1. தனிநாடு ஒன்றுக்கான அதிகாரங்களையே கூட்டமைப்பு கேட்கிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கூற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முற்றாக நிராகரித்து விட்டது.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement