Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

யாழ்.வரும் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு தமிழ்ப் பொலிஸாருக்கு இடமில்லை.


யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் இருந்து தமிழ்ப் பொலிஸார் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டு விட்டனர் என்று தெரிய வருகின்றது.

ஜனாதிபதியின் பாதுகாப்பு விடயம் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பொலிஸா ருக்கான கூட்டம் ஒன்றில் இது குறித்து அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தரும் ஜனாதிபதி, சாவகச்சேரி, யாழ்.மத்திய கல்லூரி, மாவட்ட செயலகம், நகுலேஸ்வரம் ஆகிய இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.ஜனாதிபதி கலந்து கொள்ளும் இந்த நிகழ்வுகள் எவற்றிலும் தமிழ்ப் பொலிஸார் பாதுகாப்புப் பணிக்கு அனுமதிக் கப்படமாட்டார்கள்.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரே இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் என்று யாழ்.பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரால் தமிழ்ப் பொலிஸாருக்குக் கூறப்பட்டுள்ளது.தமிழ்ப் பொலிஸார் வீதி ஒழுங்குகள் மற்றும் வீதியில் ஜனாதிபதியின் போக்குவரத்துக்கான ஒழுங்குகள் போன்றவற்றைக் கவனிக்கும் படி பணிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துவிட்டுத் தமிழ்ப் பொலிஸாரை, ஜனாதிபதி பிரவேசிக்கும் இடங்களுக்குச் செல்ல முடியாது என்ற அறிவிப்பது அவர்களை அவமதிப்பது போன்றது மட்டுமன்றி  தமிழ்ப் பொலிஸாரை அதிருப்தியடையவும் செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் இருந்து தமிழ்ப் பொலிஸார் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டு விட்டனர் என்று தெரிய வருகின்றது.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement