Monday, February 6, 2012

வே.பாலகுமாரன் குறித்த கேள்விக்கு மழுப்பிய கோத்தபாய


போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் வே.பாலகுமாரன் குறித்து இந்திய ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு சரியான முறையில் பதிலளிக்காமல் மழுப்பியுள்ளார் மகிந்தவின் சகோதரரும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச.


இந்திய இதழான ‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டிற்கு கோத்தபாயவினால் கொழும்பில் வைத்து நேற்று வழங்கப்பட்ட தனிப்பட்ட செவ்வி ஒன்றில் 'பாலகுமாரன்' குறித்து செய்தியாளரினால் கேட்கப்பட்டபோதே கோத்தபாய தெளிவாகப் பதிலளிக்காமல் மழுப்பியிருக்கிறார்.

பாலகுமாரன் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கோத்தபாய,
“குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விவகாரங்கள் எனக்குத் தெரியாது. அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா என்று எனக்குத் தெரியாது. அறியப்பட்ட பிரமுகர்களில் பெரும்பாலானோர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டனர்." எனப் பதிலளித்துள்ளார்.

"சிலர் சரணடைந்தனர். அங்கே அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் மற்றும் ஏனைய முகவரமைப்புகள் சரணடையும் நடவடிக்கைகளின் போது இருந்தனர் எனவும் சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த கோத்தாபய ராஜபக்ச, உயிர்தப்பியோரையும், சரணடைந்த புலிகளையும் பொறுப்பேற்ற போர் வலயத்தில் பிரான்சின் எம்.எஸ்.எவ் மருத்துவக்குழுவினர், இந்திய மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட அனைத்துலக முகவரமைப்புகள் இருந்தன." எனவும் கூறியுள்ளார்.


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.