Saturday, October 27, 2012

மாவீரர் நாளை தமிழர்களிடம் இருந்து பிரித்தெடுக்க நினைக்கும் சிங்களம்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து அங்கு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் காலம் காலமாக பிரச்சினைகள் பல் வேறு வடிவமாக உருப்பெற்று வந்தது யாவரும் அறிந்த விடயம்
பெரும்பான்மையான இனத்தை கொண்ட சிங்களவர்கள் தமிழர்களின் வாழ்வில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் என்று பாகு பாடின்றி பல கொடுமைகளை செய்து வந்தார்கள் இதன் பிறகே தமிழர்கள் வழியாக சிங்களத்திற்கு எதிராக அகிம்சை போர் தொடுக்கப்பட்டது அந்த போரையும் சிங்களவன் கொச்சைப்படுத்தி தமிழர்களை அடிமையாக்கி முழு இலங்கையையும் சிங்கள மயமாக்க முற்பட்டான்.

இந்த பிரச்சினைகள் தான் நாளடைவில் தமிழர்களை சிங்களவர்களுக்கு எதிராக ஒரு ஆயுத போரை தொடங்குவதற்கு வழிவகுத்தது. தமிழ் இளைஞர்கள் பலர் குழுக்கள் குழுக்களாக சிங்களத்திற்கு எதிராக போர் தொடுக்க வெளிக்கிட்டார்கள் இந்தியாவின் உதவியுடன் பல தமிழ் இயக்கங்களுக்கு அங்கே ஆயுத பயிற்சி வழங்கப்பட்டன ஆனால் எல்லா இயக்கங்களும் தமிழ் இன விடுதலைக்கு போராட தன் மானம் இல்லாமலும் உறுதி இல்லாமலும் இந்தியாவின் காலடிக்கும் இலங்கையின் காலடிக்கும் கீழே மண்டியிட்டனர்.

ஆனால் விடுதலை புலிகள் இயக்கம் மட்டும் தலைவர் பிரபாகரனின் வழிகாட்டலுடன் உறுதியுடன் தமிழீழ விடுதலைக்காக களமாட புறப்பட்டார்கள் அப்போது ஏனைய தமிழ் இயக்கங்களும் எதிரிகளுடன் சேர்ந்து இவர்களுக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்தார்கள்.

27-11-1982 அன்று தமிழீழ விடுதலை புலிகளின் முதல் வித்தாக லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நாளையே விடுதலை புலிகள் மாவீரர் நாளாக அறிவித்தார்கள் அதையே முதலில் ஈழத்தமிழர்கள் அந்த நாளில் அவர்களின் தியாகங்களை போற்றி வணங்கினார்கள் நாளடைவில் உலக தமிழர்களும் அந்த நாளில் அவர்களின் வீரங்களை போற்றி வணங்கினார்கள்.

ஈழத்தில் நவம்பர் மாதம் வந்தாலே மாவீரர்களின் இன்னிசை கானங்கள் வீதிகளில் எங்கும் ஒலித்து கொண்டு இருக்கும் இந்த மாதத்தில் ஈழத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுவது என்பது வெகு குறைவே மாவீரர் வாரம் என்பது விடுதலை புலிகளின் தலைமையால் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கொண்டாடப்படும் நிகழ்வாகும்.

ஈழத்தில் விடுதலை புலிகள் நிலைபெற்று இருக்கும் வரை ஈழத்திலும் சரி புலத்திலும் சரி  மாவீரர் நாளை குழப்புவதற்கு எந் ஒரு சதி நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எடுக்கப்பட்டாலும் அது பலனற்று போவது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விடயம் ஆகும்.

இன்றைய நிலைமையை எடுத்து கொண்டால் தமிழர்களின் போராட்டமே கேள்வி குறியாக நிற்கின்றது தமிழர்களை தமிழர்களாக ஒன்றினைப்பதே இந்த மாவீரர் நாள் தான்.

மாவீரர் நாள் என்பது தமிழர்களை பொறுத்த வரையும் "தோலும் சதையுமாகவே" காலம் காலமாகவே இருந்து வந்துள்ளது ஆனால் இன்று எதிரியானவன் ஈழத்தமிழர்கள் பெரிதும் மதிக்க கூடிய நபர்களை வைத்து கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து ஈழத்தமிழர்கள் மத்தியிலும் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியிலும் பாரிய தொரு மாற்றத்தை தமிழர்களிடத்தே ஏற்ப்படுத்த முனைகின்றான்.

இன்று ஸ்ரீலங்கா அரசுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருப்பது புலத்தில் வாழும் ஈழத்தமிழர்களே இவர்களே இன்று மாவீரர்கள் விட்ட கனவை நெஞ்சில் சுமந்து தமிழர்களின் விடுதலை பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள் இவர்களையும் இவர்கள் பின்னால் செல்லும் தமிழர்களையும் பிரிப்பதே இன்றைய ஸ்ரீலங்கா அரசின் நோக்கமாகும்.

அதன் வெளிப்பாடே தமிழர்கள் அதிகமாக வாழும் கனடா நாட்டில் தமிழர்கள் பெரிதும் மதிக்க கூடிய இசையமைப்பாளர் இளையராஜாவின் நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நடைபெறுகின்றது.

இன்றைய இளம் தலைமுறையினர் விடுதலை போராட்டத்துக்கு மிகவும் உந்து சக்தியாக இருப்பது மாவீரர் நாளே அந் நாளையும் எதிரியானவன் தமிழர்களை வைத்து அந் நாளை கேவலப்படுத்த முனைகின்றான். இன்று நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடக்கும் அடுத்த ஆண்டில் மாவீரர் வாரத்தில் நடக்கும் அதற்க்கு அடுத்த ஆண்டில் மாவீரர் நாளில் நடக்கும் ஆனால் அன்றோ யாராலும் அந் நிகழ்ச்சியை தடுக்க முடியாது.

தமிழர்களே விழித்து கொள்ளுங்கள் தமிழீழ விடுதலைக்காக களமாடி உயிர் நீத்த செல்வங்கள் எங்களில் இருந்துதான் போனவர்கள் அவர்களுக்காக ஒரு நாளை செலவழியுங்கள் உலக தமிழர்களுக்கு என்று முகவரி கொடுத்தவர்கள். அவர்களை என்றும் நெஞ்சில் நிறுத்தி எம் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவோம்.

ஒரு சமூகத்தை அழிக்க வேண்டும் என்றால், அதன் வரலாற்றை அழித்தால் போதுமானது. அந்த சமூகம் தானாகவே அழிந்து விடும் என்றார் அம்பேத்கர்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
www.eelavenkai.blogspot.com

சுவிஸ்லிருந்து தமிழீழ மாணவன்.