Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

வன்னிப் போரை செய்மதியில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா, இந்தியா!

இலங்கை அரசு – தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த இறுதி யுத்தத்தை அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் செய்மதி மூலம் பார்த்து இருக்கின்றன.

வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் என அந்நாட்களில் குற்றச்சாட்டுக்கள் பெரிதும் முன்வைக்கப்பட்டன.

இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட இலங்கை அரசுத் தரப்பினரிடம் விளக்கம் கேட்டு இருந்தது.

அப்போது செய்மதிப் புகைப்படங்களை இக்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களாக அமெரிக்கா இலங்கைத் தரப்பிடம் கொடுத்து இருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மே 05 ஆம் திகதி இலங்கைக்கான தூதுவர்களுடன் சந்திப்பு மேற்கொண்டு மதிய போசன விருந்தும் வழங்கி இருந்தார்.

இச்சந்திப்பில் அமெரிக்காவின் பதில் தூதுவர் ஜேம்ஸ். ஆர். மூரே பங்கேற்று இருந்தார்.

இவர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் மீதான இராணுவ தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதியுடன் பிரஸ்தாபித்தமையுடன் தாக்குதலுக்கான ஆதாரங்களாக ஏப்ரல் 26, ஏப்ரல் 28 ஆகிய திகதிகளில் எடுக்கப்பட்டு இருந்த செய்மதிப் புகைப்படங்களில் ஒரு தொகையை கொடுத்து இருக்கின்றார்.

ஆனால் பதில் தூதுவர் இச்சந்திப்புக்கு முதல் நாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்தும் இத்தாக்குதல் குறித்து விளக்கம் கேட்டு இருந்திருக்கின்றார். அப்போது இச்செய்மதிப் புகைப்படங்களை போகொல்லாகமவிடம் கொடுத்தும் இருக்கின்றார்.

இந்நிலையில் போகொல்லாம அமெரிக்காவினால் வழங்கப்பட்ட செய்மதிப் படங்களை முதல் நாள் காட்டி இருந்தார் என்று அமெரிக்க பதில் தூதுவருக்கு ஜனாதிபதி சொல்லினார்.

கூட்டத்துக்கு முன் மதிய போசனத்தில் அமெரிக்க பதில் தூதுவருடன் பேசியபோது இந்தியாவிடம் செய்மதிகள் உள்ளன, இலங்கையின் கள நிலைமைகளை இந்திய தரப்பினர் செய்மதிகள் மூலம் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்று மஹிந்தர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

இப்பேச்சில் இருந்து அமெரிக்காவும் இறுதி யுத்த்த்தை செய்மதி மூலம் அவதானித்துக் கொண்டி இருக்கின்றது என்பதை மஹிந்தர் சந்தேகத்துக்கு இடம் இன்றி தெரிந்து கொண்டு விட்டார் என பதில் தூதுவர் உணர்ந்து கொண்டார்.

இச்சந்திப்புத் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு உடனடியாக அனுப்பி வைத்த இராஜதந்திர ஆவணத்தில் இவ்விபரங்களை பதில் தூதுவர் எழுதி இருக்கின்றார்.



Post a Comment

1 Comments

  1. இலங்கை அரசு – தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த இறுதி யுத்தத்தை அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் செய்மதி மூலம் பார்த்து இருக்கின்றன.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement