கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடியாக நிரந்தர உபவேந்தர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிய உபவேந்தராக நிமால் ரஞ்சித் அத்தநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் தமிழ் பேசும் மாணவர்களை அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை எவ்வாறு உபவேந்தராக நியமிக்க முடியும் என்ற கேள்வியையும் மாணவர்கள் எழுப்பியுள்ளனர்.
எனவே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த உபவேந்தர் ஒருவரை நியமிக்கும் வரை வகுப்புப் பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.