Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

பொட்டு அம்மானின் புலனாய்வுக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா உடைகின்றமையை தடுக்கத் தவறியது அந்த இயக்கத்தின் புலனாய்வுத் துறைக்கு ஏற்பட்ட வெளிப்படையான தோல்வி என்று இந்தியாவைச் சேர்ந்த அவதானிகள் அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கின்றார்கள்.


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் வீ. நாராயணன், சன். ரி. வி தொலைக்காட்சியின் பிரதம செய்தி ஆசிரியர் ஏ. எஸ். பன்னீர்செல்வம், ஃபொரொன்ற் லைன் சஞ்சிகையின் விசேட செய்தியாளர் ரி. எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் இக்கருத்தை தூதரக அதிகாரிகளுக்கு முன்வைத்து இருக்கின்றார்கள்.

இது புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டு இருக்கின்ற பாரிய விழுக்காடு, புலிகள் இயக்கத்தின் முழுக் கட்டமைப்பும் ஒட்டுமொத்தமாக சிதைந்து விட்டது, கருணா பிரிந்து செல்கின்றமையை தடுக்க தவறியது இயக்கத்தின் புலனாய்வுத் துறைக்கு ஏற்பட்ட வெளிப்படையான தோல்வி என்று பேராசிரியர் வீ. நாராயணன் கூறி இருக்கின்றார்.

புலிகள் இயக்கத்தின் புகழ் பெற்ற புலனாய்வுப் பிரிவு கருணாவின் பிரிவை அனுமானிக்கத் தவறியது பெரும் ஆச்சரியத்தைத் தருகின்றது என பன்னீர்செல்வம் முக்கியமாக குறிப்பிட்டு இருக்கின்றார்.

கருணாவின் பிரிவை அனுமானிக்கத் தவறியமையால் பொட்டு அம்மானின் உயிர் புலித் தலைமையால் பறிக்கப்படலாம் என்று எதிர்வு கூறி இருக்கின்றார் சுப்பிரமணியம்.

துணைத் தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைக்கப் பெற்று உள்ளன.

 

Post a Comment

2 Comments

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா உடைகின்றமையை தடுக்கத் தவறியது அந்த இயக்கத்தின் புலனாய்வுத் துறைக்கு ஏற்பட்ட வெளிப்படையான தோல்வி என்று இந்தியாவைச் சேர்ந்த அவதானிகள் அமெரிக்கா

    ReplyDelete
  2. சண்டை என்றால் வெற்றி தோல்வி சகஜயம் ஆனால் இங்கே ஒவ்வொரு உலகத் தமிழனையும் போராடத் தூண்டுவது இறுதிப் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதும் அதற்குப்பின் நடேந்தேரிய வரலாறு காணாத மானிட அவலங்களுமே.

    இந்தப் பூமி எவனுக்கும் சொந்தமில்லை. லட்சம் பேர் செத்தால் கோடிப்பேர் பிறந்து வருவார்கள். ஆனால் மர்ம முடிசுகள் அவிழ்க்கப் படாத ஒரு தனி மனித மரணத்துக்கு ஈடாக ஒரு இனமே அளிக்கப் படுவதை எப்படி நியாப்படுத்த முடியும். ஈழத்தில் நடேந்தேரிய மனித அவலம் வரலாற்றில் ஒன்றும் புதியது அல்ல.

    கி பி 1950 இக்கு முற்பட்ட உலக வரலாற்றில் பிரிட்டனும், அமெரிக்காவும், ஜப்பானும் மனித இனத்திற்கு (தமிழர்களுக்கும், ஆப்ரிக்க, ஆசிய மக்களுக்கும்) இழைத்த கொடுமைகளை கணக்கெடுத்துப் பார்த்தால் ஈழதேசத்தில் நிகழ்ந்தது ஒன்றும் இல்லை என்று சொல்ல வேண்டும். பிற மனித உயிர்களை சித்திரவதைப் படுத்திக் கொல்வதில் ஜப்பானியர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு நிகர் வேறு யார் இருக்க முடியும்? இன்று மட்டும் ஐரோப்பிய நாடுகளில் அடிமைகள் கலாச்சாரம் இல்லையா? தமிழன் என்பவன் உலகத்தின் பார்வையில் ஓர் அடிமை இனம். அவனைக் கொல்வதற்கும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதற்கும் சிங்கப்பூர், மலேசிய, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஒருவேளை அதிகாரம் இருக்குமோ.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement