Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

இடைத்தேர்தலில் போட்டியா? : நாம் தமிழர் முடிவு?

 புதுக்கோட்டை தொகுதியில் மற்ற கட்சிகளை போல நாம் தமிழர் கட்சிக்கும் இணையான வாக்கு வங்கி உள்ளது. தொகுதி எங்கும் இளைஞர்கள் இக்கட்சியில் உள்ளனர்.

கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் நாம் தமிழர் கட்சி அ.தி.மு.க கூட்டனியை ஆதரித்து பிரச்சாரம் செய்தது.


காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு என்ற ரீதியில் அந்த ஆதரவு என்று கட்சியின் மூத்த ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்போது காரணம் சொன்னார்.

ஆனால் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அதே போல நாம் தமிழர் கட்சியும் யாருக்கு ஆதரவு என்று அறிவிக்கவில்லை. கடந்த தேர்தல் போல இந்த தேர்தலிலும் அ.தி.மு.க வுக்கு ஆதரவு கொடுப்பார்களா அல்லது காங்கிரஸ் கட்சி போட்டி இல்லை என்பதால் மௌனம் சாதிப்பார்களா என்று கட்சி நிர்வாகிகளிடையே புரியாத புதிராக உள்ளது.

அதனால் நாளை நடக்கும் மாநாட்டில் இடைத்தேர்தல் பற்றி முக்கிய முடிவு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. விலை வாசி உயர்வு, பால், பஸ் கட்டணம் உயர்வு போன்ற மக்களை வாட்டும் அரசான அ.தி.மு.க வை ஆதரித்தால் மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டி வரும் என்று கடசி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மாநாட்டின் முடிவில் யாருக்கு சாதகமாக இருக்கும்.


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. ஆனால் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அதே போல நாம் தமிழர் கட்சியும் யாருக்கு ஆதரவு என்று அறிவிக்கவில்லை. கடந்த தேர்தல் போல இந்த தேர்தலிலும் அ.தி.மு.க வுக்கு ஆதரவு கொடுப்பார்களா அல்லது காங்கிரஸ் கட்சி போட்டி இல்லை என்பதால் மௌனம் சாதிப்பார்களா என்று கட்சி நிர்வாகிகளிடையே புரியாத புதிராக உள்ளது.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement