Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

நாம் தமிழர்க்கு எதிராக கீற்றின் ஆர்ப்பாட்டக் கட்டுரை.

 கீற்று இணைய இதழ் நாம் தமிழர் கட்சிக்கு தடை ஏற்படுத்த துடிப்புடன் செயல் பட்டு வருகிறது. பலவாறாக அவதூறு பரப்பி இறுதியில் எது சொன்னால் மிக வலுவான அவதூறாக இருக்கும் என்று ரூம் போட்டு யோசித்து ஒரு சில குற்றச் சாட்டுக்களை உருவாக்கியிருக்கறது கீற்று.

தனது குற்றச் சாட்டுக்களை சில ஈழத் தமிழர்களை நியமித்து வீசத் தொடங்கியிருப்பதுதான் வேதனையான விடயம். நேற்று 25 – 06 – 2012 அன்று கீற்றில் துரைரத்தினம் தயாளன் என்பவர் நாம் தமிழர் கட்சியைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் விடுதலைப் புலிகளை அவமதிக்கும் நாம் தமிழர் கட்சி என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி புலிகளின் மாவீரர் துதிப் பாடலை தழுவி இயற்றப் பட்ட உறுதிமொழியை காயப் படுத்தி இருக்கிறார். அந்தத் தழுவல் உறுதிமொழி முற்றிலும் வேறுபட்டது. ஆனால் மாவீரர் துதியின் மெட்டில் வருகிறது. அதைக் குறிப்பிடும் துரைரத்தினம் அது ஏன் தவறு என்பதற்கு இரண்டு நிகழ்வுகளைச் சுட்டுகிறார்.

ஒன்று 1998ம் ஆண்டளவில் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, அய்க்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மகேஸ்வரன் அவர்கள் விடுதலைப் புலிகளின் தேசிய எழுச்சிப் பாடல்களை தனது பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தினார். இதனால் விடுதலைப் புலிகளின் கடுமையான கண்டிப்புக்கு உள்ளானார். இரண்டு 2002ம் ஆண்டளவில் யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளிதழ், தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உதயன் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் புகைபடத்தைப் பிரசுரித்து தனது பத்திரிகைக்கான விளம்பரமாக பயன்படுத்தியது. இதனால் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான திரு வித்தியாதரன் அவர்களை உடனடியாக வன்னிக்கு அழைத்த விடுதலைப் புலிகளின் தலைமை வித்தியாதரனை கடுமையாக கண்டித்ததுடன் பெரும் தொகையான பணமும் அபாரதமாக விதிக்கபட்டது.

மேலே சொன்ன இரண்டு நிகழ்வுகளிலுமே விடுதலைப் புலிகளின் பாடல் அப்படியே பயன்படுத்தப் பட்டது. தலைவரின் படம் வணிக நோக்கத்திற்கு பயன்பட்டது. இத்தகைய எந்த தவறும் நாம் தமிழர் செயல் பாடுகளில் நிகழ வில்லை. மிகத் தெளிவாக உறுதிமொழியானது வேறு சொற்களால் ஆகியிருக்கிறது. உலகில் ஒரே மெட்டில் ஆயிரம் கவிதைகள் இயற்றப் படும். ஆயிரம் பாடல்கள் பாடப்படும். எனவே மாவிரர் துதி மெட்டில் அமைந்த உறுதிமொழி விடுதலைப் புலிகளை அவமதிப்பதல்ல என்பதை யாரும் எளிதில் உணரலாம்.

துரைரத்தினம் தனது இரண்டாவது குற்றச் சாட்டாக புலிகளின் இலட்சினைகளைப் பயன்படுத்தியும், அதன் அரசியல் கட்டமைப்பின் பெயரைச் சொல்லியும் தங்கள் அரசியலை வளர்ப்பது என்று வந்து,…. இதை இனி மேலும் பொறுத்துக் கொண்டு, இவர்கள் தான் தமிழர் பிரதிநிதிகள் என்றும், இவர்கள் மூலம் தான் தமிழீழம் மீட்கப்படப் போகிறது என்றும் விளக்கங்கள் சொல்லிக் கொண்டு திரியும் ஈழத்தமிழ் உறவுகள் ஒருகணம் எண்ணிக் கொள்ளுங்கள், நீங்கள் போகும் பாதை சரிதானா என்று! என்று ஈழத் தமிழ் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

இது வன்மம் மிக்க குற்றச் சாட்டு. ஈழத் தமிழர்களை எதிராக திருப்பும் முயற்சி. புலிகளுக்கு தமிழகத்தில் பின்புல வலு இல்லாததே 2009 பேரழிவின் போது அனைவரும் இங்கு பார்வையாளராக இருக்க நேரிட்ட அவலம். அத்தகையவோர் பின்புலமாக நாம் தமிழர் கட்சி இருந்தால் அது வரவேற்கப்படவேண்டியதே. அதை சிறுமைப் படுத்த வேண்டியதில்லை. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களை வைத்து அரசியல் செய்ய முடியாது. உணர்வுள்ள இளைஞர்களை உசுப்பி எழுப்புவதாக பலர் குறிப்பிடும் இந்த செயலைச் செய்ய சீமான் தேவையில்லை; இந்த நாம் தமிழர் தேவையில்லை. எந்தக் கட்சியும் அரசியலும் இல்லாத 'முத்துக்குமார்' அதை செய்து காட்டி விட்டான் என்று குறிப்பிடும் துரைரத்தினம் முத்துக்குமாருக்கு நேரிட்ட துரோகங்களை அறியார்.

முத்துக் குமார் தன்னுடலை தீயினுக்கு தந்து எதை தான் இறந்த பின் காண விரும்பினானோ அதை தடுத்த சக்திகள் தமிழகத்தில் இன்னமும் ஈழ ஆதரவு வேசம் போட்டுக் கொண்டு திரிவது ஏனோ கீற்றுக்கு கண்களில் படவில்லை.

அதெல்லாம் கீற்றின் கண்களுக்குப் படாது. துரைரத்தினத்தின் கட்டுரையின் நோக்கம் புலிகளின் மாவீரர் துதிப் பாடலோ, சின்னமோ அல்ல. அதற்கும் மேலே ஒரு படி போய் நாம் தமிழர் கட்சி போன்ற ஒரு கட்சி இருக்கக் கூடாது என்பதே என்பது அவரது தொடர்ந்து வரும் பத்திகளில் வெளியாகிறது. துரைரத்தினத்தின் சீமானின் மீதான் தாக்குதலாக இவர் செய்யப் போவதாக சொல்லும் அரசியல் புரட்சி நடக்கக்கூடியதா என்று சிந்தித்துப் பாருங்கள் என்று கூறுகிறார். அதுசரி, சீமானோ அவரது கட்சியினரோ மாற்று அரசியல் புரட்சி என்று பேசினாலே அது நடக்ககூடாதது என்ற தொனி இங்கு கேட்கிறதல்லாவா? ஆனால் இது வரை இதைவிட அதிகமாக பேசியோரையெல்லாம் கேட்க யாராவது முன்வந்தார்களா?

நாம் தமிழர் கட்சி இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கான சட்டப் பூர்வமான கட்சி. வேற்று நாட்டினர் இதில் உறுப்பினராக இணைய முடியாது. ஆனால் இதை ஆட்சேபிக்கும் கட்டுரையாளர் இதை உள் நோக்கம் வேறு; வெளி நோக்கம் வேறு. புலிகள் அடையாளம் கட்சி வளர்க்க; கட்சி செயற்பாடு தமிழகத்தில் மட்டும் என்று கூறுகிறார். இதில் சிந்திப்பதற்கு என்னவுள்ளது? வேறெந்த கட்சியும் ஈழ ஆதரவுப் பரப்புரையில் புலிகளின் அடையாளத்தை பயன்படுத்தவில்லையா? வைகோ கட்சி, திருமா கட்சி போன்றன புலிகளின் அடையாளங்களை வெகுவாகப் பயன்படுத்துவது கண்கூடு. புலிக்கொடியானது வழிவழியாக தமிழ்மண்ணில் பயன்பட்டு வருவது. ராசராசன் முதல் உள்ளது புலிக்கொடி. அதையே சிறிது வேறுபாட்டுஅன் தலைவரும் புலிகளின் சின்னமாக்கினார். இன்று அதுவே சிறிது வேறுபாட்டுடன் நாம் தமிழரின் சின்னமாக உள்ளது.

புலிகளின் அரசியல் பிரிவு போல செயல் படுவோம் என்று சொன்னார் சீமான். அதற்குப் பொருள் நாம் தமிழர் கட்சி புலிகளின் அரசியல் பிரிவு என்பதல்ல. இதுவோர் உணர்வுபூர்வ நிலைப் பாடு. உணர்வுப் பூர்வ நிலைப் பாடு எதுவும் இருக்கக் கூடாதா? ஆனால் கட்டுரையாளர் மற்றும் கீற்றுவின் உண்மையான நோக்கம் என்ன? Tகுரைரத்தினம் அதை வெளிப்படையாக கூறுகிறார் தன் கட்டுரையில்: ‘’ இந்த அரசியல் செயற்பாடு இந்தியாவில் எவ்வளவு தூரம் சரியாகப் போகமுடியும்? இந்த ஆவணம் தமிழகத்தில் குழப்பங்க‌ளையும், மத ரீதியான பகைமையையும் தான் வளர்க்க முனையுமே அன்றி இது ஒற்றுமைக்கு வழி சமைக்காது.’’ இதுதான் எதிர்ப்பின் சாரம்.

இதை இங்குள்ளவர்கள் பலரும் சொல்லிக்கொண்டிருக்க, ஒன்றிரண்டு ஈழத் தமிழரைக் கோண்டு கீற்று சொல்ல வைத்திருப்பதன் உள்நோக்கம் புரிகிறது. நீங்கள் புலிகளையும் மாவீரர்களையும் மதிப்பவர்களாக இருந்திருப்பின் புலிகள் ஆட்சியில் இருந்தபோதே இந்த அரசியலைத் தொடங்கியிருக்க வேண்டும். அப்போது தெரியாத எதை இப்போது புதிதாக கண்டுபிடித்தீர்கள்? என்றும் கேட்கும் துரை ரத்தினம் ஏன் புலிகளின் பின்புலமாக ஓர் கட்சி அவர்களுக்குப் பின் தமிழகத்தில் உருவவதை விரும்ப வில்லை?

துரை உங்கள் நுரை தள்ளிய குற்றச் சாட்டுக்கள் உங்கள் வயிற்றெரிச்ச்ல் தீருமுன்னே பொய்யென நிரூபணமாகி விடும்.



பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

3 Comments

  1. கீற்று இணைய இதழ் நாம் தமிழர் கட்சிக்கு தடை ஏற்படுத்த துடிப்புடன் செயல் பட்டு வருகிறது. பலவாறாக அவதூறு பரப்பி இறுதியில் எது சொன்னால் மிக வலுவான அவதூறாக இருக்கும் என்று ரூம் போட்டு யோசித்து ஒரு சில குற்றச் சாட்டுக்களை உருவாக்கியிருக்கறது கீற்று.

    ReplyDelete
  2. பழுத்த மரம் கல்லடி படத்தான் செய்யும் பரதேசி பயலுகளுக்கு கருத்து சொல்லி நம்ம நேரத்த வீனடிக்கவேணாம் தமிழர்களே

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement